Connect with us

பொழுதுபோக்கு

அரசியல் அச்சுறுத்தல் தீவிரம்: நடிகை ராஷ்மிகாவுக்கு பாதுகாப்பு அளிக்க, கோடவா தேசிய கவுன்சில் கோரிக்கை!

Published

on

rashmika Manthana m

Loading

அரசியல் அச்சுறுத்தல் தீவிரம்: நடிகை ராஷ்மிகாவுக்கு பாதுகாப்பு அளிக்க, கோடவா தேசிய கவுன்சில் கோரிக்கை!

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனாவை சுற்றி கடந்த சில தினங்களாக அரசியல் சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில், அவருக்கு பாதுகாப்பு வழங்குமாறு மத்திய மற்றும் கர்நாடக உள்துறை அமைச்சர்களை கோடவா உரிமைகள் பாதுகாப்பு அமைப்பான கோடவா தேசிய கவுன்சில் (CNC) வலியுறுத்தியுள்ளது.கன்னட சினிமாவில் அறிமுகமாகி, தெலங்கு சினிமாவின் மூலம் முன்னணி நடிகையாக மாறிய ராஷ்மிகா மந்தனா தற்போது இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு, பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவிற்கு கடந்த ஆண்டு ராஷ்மிகாவை பலமுறை அழைத்தும் அவர் வரவில்லை. கர்நாடக காங்கிரஸ் எம்.எஸ்.ஏ, ரவி கன்னிகா, கன்னடராக இருந்து கொண்டு பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவிற்கு வர மறுக்கும் ராஷ்மிகா மந்தனாவுக்கு பாடம் புகட்ட வேண்டும் கூறியது பெரும் சர்ச்சையாக வெடித்தது.இதன் காரணமாக ராஷ்மிகாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்படும் நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏ ரவி கனிகாவின் கடுமையாக விமர்சித்ததைத் தொடர்ந்து கோடவா தேசிய கவுன்சில் ராஷ்மிகாவுக்கு தக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மத்திய மற்றும் கர்நாடக உள்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. ராஷ்மிகாவின், கோடவா பாரம்பரியம் காரணமாக அவர் நியாயமற்ற முறையில் குறிவைக்கப்படுவதாக கோடவா தேசிய கவுன்சில் கூறியுள்ளது.நடிகை ரஷ்மிகா மந்தன்னா கொடவா சமூகத்தையும் கர்நாடகாவின் குடகு பகுதியையும் சேர்ந்தவர். 2010-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதனிடையெ ராஷ்மிகாவுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோடவா தேசிய கவுன்சில் தலைவர், நந்திநேர்வந்த நாச்சப்பா புகார் அளித்துள்ளார், இந்த புகாரில், ராஷ்மிகாவுக்கு எதிராக ஒரு பயம் உருவாக்கப்பட்டு, அவரை தேவையற்ற அரசியல் விவாதங்களுக்கு இழுத்து, மனரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கி வருகின்றனர். அவரது வெற்றி அரசியல் செல்வாக்கிலிருந்து வேறுபாடானது.அவரது வெற்றியை அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்குப் பயன்படுத்தப்படக்கூடாது என்றும் கூறியுள்ளார். கன்னட திரைப்படத்துடன் தனது வாழ்க்கையைத் தொடங்கிய ரஷ்மிகா மந்தனா, கடந்த ஆண்டு (பெங்களூரு) சர்வதேச திரைப்பட விழாவில் நாங்கள் அவரை அழைத்தபோது கலந்து கொள்ள மறுத்துவிட்டார். தனது ஆரம்பகால வாழ்க்கையைப் பொருட்படுத்தாமல் கர்நாடகாவையும் கன்னட மொழியையும் புறக்கணித்து அவமதித்தார் என்று எம்.எல்.ஏ ரவி கன்னிகா கூறியிருந்தார்.மேலும், ஒரு சக சட்டமன்ற உறுப்பினர்  10-12 முறை ராஷ்மிகாவின் வீட்டிற்குச் சென்றதாகவும், ஆனால் அவர் விழாவிற்கு வர மறுத்துள்ளார். மேலும், எனக்கு ஹைதராபாத்தில் எனது வீடு இருக்கிறது, கர்நாடகா எங்கே இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை, எனக்கு நேரமில்லை. என்னால் வர முடியாது’ என்று ராஷ்மிகா கூறியுள்ளார். அவருக்கு நாம் பாடம் கற்பிக்க வேண்டாமா? அவரது செயல்கள் விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறியிருந்தார்.இதற்கு பதில் அளித்த கோடவா தேசிய கவுன்சில் தலைவர், நந்திநேர்வந்த நாச்சப்பா, அரசியல் தலைவர்களின் கருத்துக்களுக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்து, கண்ணாடி வீடுகளில்” இருப்பவர்கள் தீங்கிழைக்கும் செயல்களில் ஈடுபடுகிறார்கள். துன்புறுத்தல் தொடர்ந்தால், இந்த விஷயம் தேசிய மற்றும் சர்வதேச மகளிர் ஆணையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன