சினிமா
ஜனநாயகன் படத்தில் இணைந்த மூன்று இயக்குனர்கள்.. தளபதி கொடுக்கும் சர்ப்ரைஸ்

ஜனநாயகன் படத்தில் இணைந்த மூன்று இயக்குனர்கள்.. தளபதி கொடுக்கும் சர்ப்ரைஸ்
இப்போது தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியுள்ளதால் சினிமாவில் இருந்து ஓய்வெடுக்க உள்ளார். கடைசியாக விஜய் நடிப்பில் வெங்கட் பிரபுவின் கோட் படத்தில் வெளியானது. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் எச் வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படம் தான் விஜய்யின் கடைசி படமாக பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கியது. இந்நிலையில் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
இந்த சூழலில் இப்படத்தின் மூன்று பாடல்கள் இன்னும் படமாக்கப்பட வேண்டி இருக்கிறது. அதில் ஒரு பாடலில் தளபதி மிகப் பெரிய சர்ப்ரைஸை ரசிகர்களுக்கு கொடுக்க இருக்கிறார். அதாவது விஜய் உடன் அந்த பாடலில் மூன்று இயக்குனர்கள் நடனமாட இருக்கின்றனர்.
விஜய் சமீபகாலமாக இளம் இயக்குனர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுத்து வந்தார். அவர்களுடன் தற்போது வரை நட்பு பாராட்டியும் வருகிறார். அந்த வகையில் அட்லீயை தனது உடன் பிறந்தவர் போல தான் விஜய் பார்த்த வருகிறார்.
விஜய்க்கு தெறி, மெர்சல் மற்றும் பிகில் என தொடர்ந்து மூன்று ஹிட் படங்களை அட்லி கொடுத்திருந்தார். அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் விஜய்க்கு பீஸ்ட் படத்தையும், லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் மற்றும் லியோ படத்தையும் கொடுத்திருந்தனர்.
இவர்கள் மூவரையுமே ஒரே திரையில் வைத்து விஜய் போட்டோவும் எடுத்திருந்தார். அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவியது. இதை அடுத்து ஜனநாயகன் படத்தில் இந்த மூன்று இயக்குனர்களும் நடனமாட இருக்கின்றனர்.
ஆகையால் அந்த பாடல் வேற லெவலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ஜனநாயகன் படத்தை பற்றிய பல சுவாரசியமான விஷயங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.