இலங்கை
நாடு முழுவதும் அரச மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டம்!

நாடு முழுவதும் அரச மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டம்!
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் (மார்ச் 10ஆம் திகதி) அநுராதபுரம் மருத்துவமனையில் பெண் மருத்துவர் ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அரச மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளளனர்.
இதன்படி, இன்று காலை எட்டு மணி முதல் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தை அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) நிர்வாகக் குழு அறிவித்துள்ளது.
இந்த வேலைநிறுத்தம் நாளை, வியாழக்கிழமை, மார்ச் 13 காலை எட்டு மணி வரை தொடரும் எனவும், இது நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளையும் பாதிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அவசர சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படாது என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் உறுதியளித்துள்ளது.
கூடுதலாக, சிறுவர்கள் மருத்துவமனைகள், மகப்பேறு மருத்துவமனைகள், சிறுநீரக சிகிச்சை பிரிவுகள், தேசிய மனநல நிறுவனம் மற்றும் முப்படை மருத்துவமனைகளுக்கு இந்த வேலைநிறுத்தம் பொருந்தாது.
இந்த விவகாரம் குறித்த கூடுதல் தகவல்கள் உரிய நேரத்தில் வழங்கப்படும் என்றுஅரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இதற்கிடையில், அநுராதபுரம் போதனா மருத்துவமனையில் பெண் மருத்துவ மீது பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட சந்தேக நபரைக் கண்டுபிடிக்க தொடர்ச்சியான நடவடிக்கைகள் நடந்து வருவதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.