Connect with us

இந்தியா

Puducherry Budget 2025 Highlights: மகளிர் உதவித்தொகை ரூ.2,500; கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1,000; இலவச கோதுமை: ரங்கசாமி அறிவிப்பு

Published

on

Puducherry Budget 2025 Highlights CM N Rangaswamy announcement Tamil News

Loading

Puducherry Budget 2025 Highlights: மகளிர் உதவித்தொகை ரூ.2,500; கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1,000; இலவச கோதுமை: ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி மாநிலத்தின் 2025 – 2026ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, நிதித்துறை பொறுப்பு வைக்கும் முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். ரூ. 3,600 கோடிக்கு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து, முதலமைச்சர் ரங்கசாமி உரையாற்றினார். இது தொடர்பாக அவர் பேரவையில் வெளியிட்ட அறிவிப்புகள் பின்வருமாறு:-அனைத்து விவசாயிகளுக்கும் மழைக்கால நிவாரணமாக இந்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் ரூ.2000 வழங்கப்படும். பால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் 50 விழுக்காடு கொண்ட பசுக்கள் வழங்கப்படும்.புதுச்சேரியில் உள்ள 2 அருங்காட்சியங்கள் மத்திய அரசின் உதவியுடன் புரணமைக்கப்படும். அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் வரும் நிதியாண்டு முதல்  இலவச அரிசியுடன் 2 கிலோ கோதுமை இலவசமாக வழங்கப்படும். மதிய உணவு திட்டத்தில் வார இருமுறை வழங்கப்படும் சத்துணவுடன் கூடிய முட்டை இனி வாரத்தில் அனைத்து நாட்களிலும் வழங்கப்படும். 6 முதல் 12 வரை அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி (இளநிலை கல்வி)  படிக்கும் மாணவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு மாதத்தோறும் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும். முதியோர் உதவி பெறும் மீனவ பெண்கள் உயிரிழந்தால் வழங்கப்படும் ஈமச்சடங்கு தொகை ரூபாய் 15 ஆயிரத்தில் இருந்து ரூபாய் 20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு  வரும் ஆண்டு முதல் ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படும்கிழக்கு கடற்கரை சாலையில் புதிதாக அமைய உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் வைக்கப்படும். சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2 கோடியில் இருந்து 3 கோடியாக உயர்த்தப்படும். புதுச்சேரியில் 21 வயது முதல் 55 வயது வரை உள்ள எந்தவிதமான உதவித்தொகையும் பெறாத குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ரூபாய் 1000 உதவித்தொகை, ரூபாய் 2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். இவ்வாறு முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார். சட்டபேரவை ஒத்திவைப்புமுதலமைச்சர் ரங்கசாமி புதுச்சேரி நிதிநிலை அறிக்கையை 1 மணி நேரம் 10 நிமிடம் வாசித்து முடிந்தார். இதனைத்தொடர்ந்து சபையை நாளை காலை வரை ஒத்தி வைப்பதாக  சபாநாயகர் செல்வம் அறிவித்தார்.செய்தி:  பாபு ராஜேந்திரன்  – புதுச்சேரி.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன