Connect with us

உலகம்

நாட்காலியுடன் வௌியேறிய ஜஸ்டின் ட்ரூடோ!

Published

on

Loading

நாட்காலியுடன் வௌியேறிய ஜஸ்டின் ட்ரூடோ!

கனடா தேர்தலில் கார்னியின் வெற்றிக்குப் பிறகு, ட்ரூடோ நாடாளுமன்றத்திலிருந்து நாற்காலியுடன் வெளியேறும் புகைப்படம் வைரலாகியுள்ளது. அவரது நகைச்சுவை உணர்வை பலரும் பாராட்டி வருகின்றனர்.

கனடா தேர்தலில் கார்னியின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து அதிகார மாற்றத்திற்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளன. அதன்படி, ஜஸ்டின் ட்ரூடோ திங்களன்று புதிய லிபரல் கட்சித் தலைவரும் பிரதமராக நியமிக்கப்பட்டவருமான மார்க் கார்னியைச் சந்தித்தார்.

Advertisement

இதற்கிடையில், ட்ரூடோ அரசாங்கத்தில் தனது பதவிக்காலம் முடிவடைவந்து வெளியேறியுள்ளார்.

அந்நாட்டின் நாடாளுமன்றமான ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் இருந்து தனது நாற்காலியை ட்ரூடோ எடுத்துச் செல்லும் தருணத்தை ரொய்ட்டர்ஸ் புகைப்படக் கலைஞர் ஒருவர் படம் பிடித்துள்ளார்.

ட்ரூடோ தனது நாக்கை வெளியே நீட்டிக்கொண்டு கையில் நாற்காலியுடன் இருக்கும் அந்தப் புகைப்பட்டம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

Advertisement

ட்ரூடோ பிரதமர் பதவியிலிருந்து விலகும்போது எடுக்கப்பட்டுள்ள இந்த வித்தியாசமான படம் அவரது பிரியாவிடையின் அடையாளமாக மாறியுள்ளது. இந்தப் படம் சமூக ஊடக பயனர்களின் கவனத்தை விரைவாக ஈர்த்தது. அவர்கள் ஜஸ்டின் ட்ரூடோவின் நகைச்சுவை உணர்வைப் பாராட்டி கமெண்ட் செய்து வருகிறார்கள். அவரது இந்த விளையாட்டுத்தனமான சைகை பொதுமக்களை மிகவும் கவர்ந்துள்ளது.

“ட்ரூடோவின் ரியாக்‌ஷனே அனைத்தையும் கூறுகிறது” என்று ஒரு பயனர் குறிப்பிட்டுள்ளார். “என்ன ஒரு ஷாட்! அருமையான படம்” என்று மற்றொருவர் பதிவிட்டார். “அருமையான புகைப்படம். இதை பத்திரமாக சேமித்து வைக்க வேண்டும்” என்று இன்னொருவர் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

“ஜஸ்டின் ட்ரூடோ மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார், நான் அவரை மிஸ் பண்ணப் போகிறேன்,

Advertisement

 ஆனால் இப்போது அவர் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிடட்டும்” என்று ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். “ட்ரூடோ 10 வருடங்களாகக் கனடாவை கொள்ளையடித்தார்… அவரே தான் பதவியிலிருந்து விலகிச் செல்லும்போது ஒரு நாற்காலியைத் ஏன் திருடக்கூடாது?” என்று என்று மற்றொரு பயனர் கூறுகிறார்.

ஜஸ்டின் ட்ரூடோ தனது உணர்ச்சிபூர்வமான பிரியாவிடை உரையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை விமர்சனம் செய்தார். ஞாயிற்றுக்கிழமை ஒட்டாவாவில் நடந்த நிகழ்வின் போது, ​​மேடையில் ஜஸ்டின் ட்ரூடோ கண்ணீர் மல்க நெகிழ்ச்சியுடன் பேசியதைக் காண முடிந்தது.

“கடந்த 10 ஆண்டுகளில், பல சவால்கள் இருந்தன, நெருக்கடிகள் வந்தன. அனைத்தையும் கனடியர்கள் எதிர்கொண்டு தாங்கள் யார் என்பதைக் காட்டியுள்ளனர். ஒன்றிணைந்து இருப்போம்.

Advertisement

 ஒருவருக்கொருவர் ஆதரவாக நிற்போம்” என ட்ரூடோ தனது பிரியாவிடை உரையில் கூறினார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன