Connect with us

இலங்கை

மாரடைப்புக்காக கண்டுபிடிக்கப்பட்ட புதிய தடுப்பூசி: சீன விஞ்ஞானிகள் சாதனை

Published

on

Loading

மாரடைப்புக்காக கண்டுபிடிக்கப்பட்ட புதிய தடுப்பூசி: சீன விஞ்ஞானிகள் சாதனை

மாரடைப்பு மற்றும் பக்கவாதத்திற்கான தடுப்பூசியை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

தமனி எனும் இரத்த நாளத்தில் ஏற்படும் அடைப்பு காரணமாக, இரத்த ஓட்டம் தடைப்பட்டு, இரத்த உறைவு ஏற்படுகிறது.

Advertisement

இதன் காரணமாக பக்கவாதம், மாரடைப்பு, சிறுநீரக செயலிழப்பு போன்றவைகள் ஏற்படுகின்றன.

இந்நிலையில், பக்கவாதம் மற்றும் மாரடைப்பை தடுப்பதற்கான தடுப்பூசியை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சீனாவில் உள்ள நான்ஜிங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதற்கான நானோ தடுப்பூசியை தயாரித்து, அதை எலிகள் மீது சோதித்துள்ளனர்.

Advertisement

இதில் எதிர்பார்த்த முடிவு கிடைத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.    பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சியின் முன்னேற்றத்தைத் தடுப்பது P210 என்னும் புரதம் ஆகும்.

இந்த தடுப்பூசி P210 ஆன்டிஜெனை நுண்ணிய இரும்பு ஆக்சைடு நானோ துகள்களுடன் பிணைப்பதன் மூலம் செயல்படுகிறது.

இதன் மூலம் இந்த அடைப்புகளை, ஸ்கேன் மூலம் கண்டறியவும் , ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் ஸ்டென்ட்களைப் பயன்படுத்துதல் போன்ற நடைமுறைகள் மூலம் சிகிச்சையளிக்கவும் முடியுமெனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன