விளையாட்டு
Rishabh Pant Salary | வரியை கழித்தால், ரிஷப் பண்ட்-க்கு ரூ.27 கோடியில் எவ்வளவு கிடைக்கும்?

Rishabh Pant Salary | வரியை கழித்தால், ரிஷப் பண்ட்-க்கு ரூ.27 கோடியில் எவ்வளவு கிடைக்கும்?
நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய விக்கெட் கீப்பர் – பேட்ஸ்மேனான
ரிஷப் பண்ட், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியால் ரூ.27 கோடிக்கு வாங்கப்பட்டார். இதன்மூலம் IPL வரலாற்றிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்ட வீரராக ரிஷப் பண்ட் மாறியுள்ளார்.
டெல்லி கேப்பிடல்ஸ் “ரைட் டு மேட்ச்” ஐ பயன்படுத்தி ரிஷப் பண்ட்-ஐ ரூ.20.75 கோடிக்கு மீண்டும் வாங்க முயன்றது. ஆனால், லக்னோ அணி ரூ.27 கோடிக்கு ரிஷப் பண்ட்-ஐ விலை கேட்டதால், அவரை வாங்கும் முடிவை டெல்லி அணி கைவிட்டது.
2022ல் ஏற்பட்ட கார் விபத்துக்குப் பிறகு ரிஷப் பண்ட் சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் கால்பதித்தார். சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய அவர், அதிக விலைக்கு செல்வார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. அதே போல வரலாற்றிலேயே அதிக விலைக்கு அவர்
ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 2025-யில் லக்னோ அணியை அவர் வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க:
மீண்டும் கேப்டனாகும் விராட் கோலி..! பெங்களூரு அணியின் உத்தேச பிளேயிங் 11 என்ன?
ரிஷப் பண்டின் நிகர சம்பளம் எவ்வளவு?
2025 IPL ஏலத்தில் வீரர்கள் மூன்று ஆண்டுகளுக்கான ஒப்பந்தங்களின் அடிப்படையில் ஏலத்தில் எடுக்கப்படுகின்றனர். ஒரு அணியால் செலுத்தப்படும் தொகை, அந்த ஒப்பந்த காலத்தின் மொத்த சம்பளத்தை குறிக்கிறது. உதாரணமாக, லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் ரிஷப் பண்ட்-ஐ ரூ.27 கோடியில் ஏலம் எடுத்ததால், அவருக்கு 3 ஆண்டுகளுக்கும் சேர்த்து ரூ.27 கோடி வழங்கப்படும்.
மேலும், இந்த தொகையிலிருந்து இந்திய அரசு ரூ.8.1 கோடி வரி பிடித்துக்கொள்ளும். இதனால், ரிஷப் பண்ட் அடுத்த 3 ஆண்டுகளுக்கும் சேர்த்து, ரூ.18.9 கோடி சம்பளமாக பெறுவார்.
அவர் காயமடைந்தால் என்ன ஆகும்?
IPL போட்டியின் போது ரிஷப் பண்ட் காயமடைந்தால், அவர் முழு தொகையைப் பெறுவார். ஆனால், போட்டிக்கு முன்பாக காயம் ஏற்பட்டு விளையாட முடியாமல் போனால், லக்னோ அணி வேறு ஒருவரை மாற்றாக தேர்வு செய்யலாம். மேலும் பிசிசிஐ-யில் உள்ள காப்பீட்டுக் கொள்கையின் கீழ் அவருக்கான சம்பளம் முழுவதுமாக வழங்கப்படும். ஆனால் வெளிநாட்டு வீரர் யாரேனும் காயமடைந்தால், அவர்களுக்கான சம்பளம் வழங்கப்படாது.
ஒரு போட்டியிலும் விளையாடாமல் இருந்தால் என்ன ஆகும்?
ஒரு இந்திய அல்லது வெளிநாட்டு வீரர் IPL தொடரின் ஒப்பந்தத்தில் இருந்து, ஒரு போட்டியிலும் விளையாடாமல் போனால், அவருக்கு முழு சம்பளமும் வழங்கப்படும்.
ஆனால், ஒரு வீரர் தனிப்பட்ட காரணங்களால் தொடரிலிருந்து விலகினால், அவருக்கு கொடுக்கப்படவேண்டிய தொகையிலிருந்து அவர் விளையாடிய போட்டிகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டே ஊதியம் வழங்கப்படும். மேலும் போட்டியின் போது காயம் ஏற்பட்டாலும், அணி முழு தொகையையும் வழங்கவேண்டும்.