பொழுதுபோக்கு
‘ஃபயர்’ ஓ.டி.டி வெளியீடு தள்ளிப் போகிறதா? ரசிகர்கள் ஏமாற்றம்!

‘ஃபயர்’ ஓ.டி.டி வெளியீடு தள்ளிப் போகிறதா? ரசிகர்கள் ஏமாற்றம்!
சரவணன் மீனாட்சி மூலம் பிரபலமடைந்த பிரபல சின்னத்திரை நடிகை ரச்சிதா வெள்ளித்திரையில் ஃபயர் படத்தின் மூலம் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார். பிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ் இந்த படத்தின் நாயகனாக நடித்தார். கடந்த பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தின ஸ்பெஷலாக ஃபயர் படம் திரைக்கு வந்தது.ஃபயர் – கிளாமரில் உச்சம்:சின்னத்திரையில் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்த ரச்சிதா இந்த படத்தில் கிளாமரில் உச்சம் தொட்ட டீசர் மற்றும் பாடல் காட்சிகள் நடித்தது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தது. அதுவே, இந்த படம் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. அவர் மட்டுமல்ல சாந்தினி தமிழரசன், சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான் என படத்தில் இன்னும் 3 கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள். அவர்களும் தங்களுடைய பங்குக்கு கிளாமரில் தாராளம் காட்டியிருக்கிறார்கள்.ஃபயர் – உண்மை கதை:நாகர்கோவிலில், கடந்த 2020-ல் இளம் பெண்களை காதல் வலையில் சிக்கவைத்து அவர்களுடைய அந்தரங்க வீடியோக்களை வைத்து, மிரட்டி பணம் பறித்த காசி என்ற இளைஞனின் உண்மையான கதையை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் காசி எனும் கதாபாத்திரத்தில் பிக் பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ் நடித்துள்ளார். முதல் பாதியில் காதல் மன்னனாகவும் இரண்டாம் பாதியில் மிரட்டல் வில்லனாகவும் தன்னால் முடிந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இப்படம் பார்வையாளர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது மற்றும் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது.பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதியை எதிர்த்து கேள்வி எழுப்பும் படம் என விளம்பரத்தில் சொல்லி இருந்தார்கள். ஆனால் படத்தில் 4 ஹீரோயின்களையும் எவ்வளவு கிளாமராக காட்ட முடியுமோ அவ்வளவு கிளாமராக காட்டி ஆபாசத்தில் உச்சம் தொட்டிருக்கிறார்கள். அந்த வகையில் படம் சொல்ல வரும் மெசேஜை இயக்குனரே முறியடித்து விட்டார் என விமர்சனங்கள் எழுந்தன. இதனால் படம் படுதோல்வி அடைந்தது.இந்நிலையில், தற்போது இப்படம் ஓடிடியில் ரிலீஸ் தயாராகி உள்ளது. இந்த படத்தின் ஓடிடி உரிமையை வாங்கியுள்ள டெண்ட்கொட்டா ஓடிடி நிறுவனம், இன்று வெளியிட இருந்தது. இந்நிலையில், படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மறுவெளியீட்டு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.