Connect with us

சினிமா

OTT Release : லக்கி பாஸ்கர் முதல் ப்ளடி பெக்கர் வரை… ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள படங்கள் – வெப்சீரிஸ் லிஸ்ட்

Published

on

OTT Release : லக்கி பாஸ்கர் முதல் ப்ளடி பெக்கர் வரை… ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள படங்கள் - வெப்சீரிஸ் லிஸ்ட்

Loading

OTT Release : லக்கி பாஸ்கர் முதல் ப்ளடி பெக்கர் வரை… ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள படங்கள் – வெப்சீரிஸ் லிஸ்ட்

தியேட்டர் ரிலீஸைப் போலவே ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களுக்கும் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரசிகர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் சவுகரியமாக பார்க்கலாம் என்பதால் ஓடிடியில் படங்களை பார்ப்பதில் அவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் ஓடிடியில் இன்று வெளியாகியுள்ள சில முக்கிய படங்களை பார்க்கலாம்.

Advertisement

லக்கி பாஸ்கர் – துல்கர் சல்மான் முன்னணி கேரக்டரில் நடித்து சூப்பர்ஹிட்டா லக்கி பாஸ்கர் திரைப்படம் நேற்று நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தியேட்டர் ரிலீஸில் இந்த படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருந்தது. நெட்ஃப்ளிக்ஸில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் இந்த படம் வெளியிடப்பட்டுள்ளது.

ப்ளடி பெக்கர் – கவின் நடிப்பில் கடந்த 31 ஆம் தேதி தீபாவளியையொட்டி இந்த திரைப்படம் வெளியானது. நெல்சன் தயாரித்திருந்த இந்த படத்தில் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகதா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இந்த படம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்தகன் – இந்தியில் சூப்பர் ஹிட்டான அந்தாதுன் என்ற படத்தை அந்தகன் என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். இதில் பிரசாந்த், சிம்ரன் முன்னணி கேரக்டர்களில் நடித்துள்ளனர். தியாகராஜன் இயக்கிய இந்த திரைப்படம் திரையரங்குகளில் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை இன்று முதல் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

Advertisement

ப்ரதர் – ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் முன்னணி கேரக்டரில் நடித்து ராஜேஷ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம். இதில் நட்டி, பூமிகா உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். மிகவும் சுமாரான வரவேற்பை பெற் இந்த திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இதேபோன்று தமிழ் மொழி படங்களை பொருத்தளவில் KA  என்ற திரைப்படம் ETV Win தளத்திலும், தீபாவளி போனஸ் ஆஹா ஓடிடி தளத்திலும், சந்தேகம் என்ற படம் ETV Win ஓடிடியிலும் வெளியிடப்பட்டுள்ளது.

அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய The Madness என்ற வெப் சீரிஸ் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியிலும், தி ட்ரங்க் (The Trunk) என்ற கொரிய மொழி வெப் சீரிஸ் நெட்ஃப்ளிக்ஸிலும் வெளியாகியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன