பொழுதுபோக்கு
‘ரஜினியால் மட்டுமே சில விஷயங்களை செய்ய முடியும்; பன்ச் வசனங்கள் நிரம்பிய என் படங்களை ரசிகர்கள் நிராகரித்தனர்’: மனம் திறந்த அஜித்

‘ரஜினியால் மட்டுமே சில விஷயங்களை செய்ய முடியும்; பன்ச் வசனங்கள் நிரம்பிய என் படங்களை ரசிகர்கள் நிராகரித்தனர்’: மனம் திறந்த அஜித்
கடந்த 20 ஆண்டுகளாக தமிழ் ஊடகங்களுக்கு நடிகர் அஜித் குமார் நேர்காணல் வழங்கவில்லை. குறிப்பாக, தன்னுடைய படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வுகளில் கூட அவர் கலந்து கொள்வதில்லை. கடந்த 2007-ஆம் ஆண்டு தான் நடித்த ‘பில்லா’ திரைப்படம் தொடர்பான நிகழ்வுகளில் மட்டுமே அவர் கலந்து கொண்டார். இந்தப் படத்தை முதன்முறையாக இந்தியில் ‘டான்’ என்ற பெயரில் அமிதாப் பச்சன் நடித்திருந்தார். அப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு ரஜினிகாந்த் நடிப்பில் ‘பில்லா’ என்ற பெயரில் வெளியானது. இப்படம், இதே பெயரில் அஜித் குமார் நடிப்பில் 2007-ஆம் ஆண்டு மீண்டும் ரீமேக் செய்யப்பட்டது. அந்த சமயத்தில் அஜித் கலந்து கொள்ளும் கடைசி ப்ரோமோஷன் நிகழ்ச்சி என யாருக்கும் தெரியாது. எனினும், சில சுவாரசியமான தகவல்களை அஜித் அப்போது பகிர்ந்து கொண்டார். ஆங்கிலத்தில் படிக்கவும்: When Ajith Kumar said fans rejected his punch dialogue-laden films: ‘Only Rajinikanth sir can do certain things…’ ஜெயா டிவிக்கு அளித்த பேட்டியில், வணிக ரீதியாக பல தோல்வி படங்களை கொடுத்த நடிகர்களில் தானும் ஒருவர் என்று அஜித் கூறினார். எனினும், தனது ரசிகர்களின் பாராட்டு தனக்கு குறையவில்லை என்று அவர் கூறியிருந்தார். “தாய் – குழந்தை உறவு மட்டுமே அளவுக் கடந்த அன்பு கொண்டது எனக் கூறுவார்கள். அதே போன்ற ஒரு அன்பை நடிகர் – ரசிகர் உறவிலும் நான் காண்கிறேன். என் ரசிகர்கள் என்னிடமிருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை. அவர்களின் அன்புக்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். அந்த வகையில் தரமான படங்களை மட்டுமே என்னால் செய்ய முடியும்” என அஜித் தெரிவித்தார்.”பன்ச் வசனங்கள் பேசுவதில் எனக்கு விருப்பம் இல்லை. அவற்றில் எனக்கு நம்பிக்கையும் இல்லை. ரஜினி சாரால் மட்டுமே அது போன்ற பன்ச் வசனங்களை கேமராவை நோக்கி பேச முடியும். மாறி வரும் சினிமாவின் பரிமாணங்களுக்கு ஏற்ப நடிகர்களும் மாற்றம் அடைய வேண்டும். உதாரணமாக, ‘முகவரி’ திரைப்படத்தையே எனது சிறந்த திரைப்படமாக நான் கருதுகிறேன். மேலும், கிரீடம், வாலி, வரலாறு, வில்லன் போன்ற திரைப்படங்ள் வெவ்வேறு வகையானவை. இந்த திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன. ஆனால், நான் நிறைய பன்ச் வசனங்கள் பேசிய திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை. எனது ரசிகர்களும் அவற்றை விரும்பவில்லை” என அஜித் கூறியிருந்தார்.