சினிமா
அது என் விருப்பம், எந்த வெட்கமும் இல்லை.. ஓப்பனாக சொன்ன ஸ்ருதிஹாசன்
அது என் விருப்பம், எந்த வெட்கமும் இல்லை.. ஓப்பனாக சொன்ன ஸ்ருதிஹாசன்
உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நாயகியாக களமிறங்கியவர் நடிகை ஸ்ருதிஹாசன்.பாடகி, இசையமைப்பாளர், நாயகி என பன்முகம் கொண்ட ஸ்ருதிஹாசன் இசை துறையில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக சலார் திரைப்படம் வெளியாக கலவையான விமர்சனத்தையே பெற்றது.தற்போது ஸ்ருதிஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்தில் நடித்து வருகிறார்.ஸ்ருதிஹாசன் அவரது மூக்கில் ரைனோ பிளாஸ்டி எனப்படும் அறுவை சிகிச்சையை செய்துள்ளதாக பலர் விமர்சித்து வந்த நிலையில், இது குறித்து பேட்டி ஒன்றில் அவர் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.அதில், ” என் மூக்கு எலும்பில் சிறிய மாறுதல் ஒன்று இருந்தது. அதன் காரணமாகத்தான் இந்த அறுவை சிகிச்சையை நான் செய்துகொண்டேன். அழகுக்காக செய்துகொள்ளவில்லை.அவ்வாறு நான் அழகிற்காக செய்து இருந்தாலும் நான் சொல்லியிருப்பேன். ஒரு பெண் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்வது அந்தப் பெண்ணின் தனிப்பட்ட விருப்பம். அதில் வெட்கப்படவோ, பிறரிடம் நியப்படுத்தவோ அவசியம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.