நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 18/03/2025 | Edited on 18/03/2025

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் கூலி. சன்பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதனிடையே படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. 

இதையடுத்து இப்படத்திலிருந்து தொடர்ந்து கதாபாத்திர அறிமுக போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது. அதன்படி மலையாள நடிகர் சௌபின் சாஹிர், தயாள் என்ற கதாபாத்திரத்திலும் தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா, சைமன் என்ற கதாபாத்திரத்திலும் கன்னட நடிகர் உபேந்திரா கலீஷா என்ற கதாபாத்திரத்திலும் சத்யராஜ் ராஜசேகர் என்ற கதாபாத்திரத்திலும் ஸ்ருதிஹாசன் பிரீத்தி என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருவதாக அறிவித்திருந்தனர். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் முன்னதாக நகர்ஜூனா சம்பந்தப்பட்ட காட்சி படப்பிடிப்பு தளத்தில் இருந்து கசிந்தது. இது தொடர்பாக இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என லோகேஷ் கனகராஜ் கேட்டுக்கொண்டார். 

Advertisement

இப்படத்தின் பூஜா ஹெக்டே இணைந்ததாகக் கடந்த மாதம் படக்குழு அறிவித்தது. பின்பு கடந்த 14ஆம் தேதி லோகேஷ் கனகராஜின் பிறந்தநாள் என்பதால் அன்று படத்தின் படப்பிடிப்பு தள பிரத்யேக புகைப்படங்களை வெளியிட்டது. இதையடுத்து நேற்று(17.03.2025) இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்து ஒரு சிறிய வீடியோவை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகக் கூறி ரஜினி, நாகர்ஜூனா, உபேந்திரா, சத்யராஜ், சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட இப்படத்தின் குழுவினர் அனைவரிடமும் பயணித்தது அற்புதமான அனுபவம். இந்த அனுபவத்தை என்றென்றும் போற்றுவேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் படப்பிடிப்பு முடிந்ததை படக்குழு கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். 


<!–
–>

Advertisement

<!–உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement

–>