Connect with us

உலகம்

புவி அச்சு சாய்ந்தது: புவி பௌதீகவியல் ஆய்வில் தகவல்!

Published

on

Loading

புவி அச்சு சாய்ந்தது: புவி பௌதீகவியல் ஆய்வில் தகவல்!

தென் கொரியா தலைநகர் சியோலில் உள்ள சியோல் தேசிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் கி-வியா சியோ தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் கடந்த 1993 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை புவி பௌதீகவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

‘ஜியோ பிசிக்கல் ரிசர்ச் லெட்டர்ஸ்’ என்ற இதழில் வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரையொன்றில், நிலத்தடி நீர் குறைவு காரணமாக, பூமியின் துருவம் சுமார் 80 சென்றி மீற்றர் கிழக்கு நோக்கி நகர்ந்துள்ளது.

Advertisement

ஆராய்ச்சி மேற்கொண்ட காலத்தில் பூமியிலிருந்து 2,150 ஜிகா தொன்கள் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டுள்ளது.

பூமியிலிருந்து நிலத்தடி நீர் அதிகம் உறிஞ்சப்பட்டதால், கடல் மட்டமும் 0.24 அங்குலம் உயர்ந்து, பூமியின் நிறை விநியோகத்தில் மாற்றம் ஏற்பட்டு அதன் சுழற்சி அச்சு ஆண்டுக்கு 4.36 சென்றி மீற்றர் சாய்வதற்கு வழிவகுத்திருக்கிறது. தற்போது அது 31.5 அங்குலம் சாய்ந்துள்ளது.

பூமியின் அச்சில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றத்தால், வானிலையில் உடனடி பாதிப்பு ஏற்படப் போவதில்லை. ஆனால் தொடர்ச்சியாக நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டால், நீண்டகால பாதிப்பு ஏற்படலாம்.

Advertisement

பூமியின் துருவ இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள், காலநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். அதனால், நீடித்த நீர் முகாமை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன