Connect with us

இந்தியா

திருநள்ளாறில் அரசு மருத்துவக்கலூரி: மத்திய அரசிடம் கோரிக்கை; ரங்கசாமி தகவல்

Published

on

Puducherry Assembly session CM Rangasamy Thirunallar medical college central govt permission Tamil News

Loading

திருநள்ளாறில் அரசு மருத்துவக்கலூரி: மத்திய அரசிடம் கோரிக்கை; ரங்கசாமி தகவல்

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் திருநள்ளாறில் அரசு மருத்துவக்கல்லூரி தொடங்க மத்திய அரசின் அனுமதியை கேட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி தகவல் தெரிவித்தார்.15-வது புதுச்சேரி சட்டமன்றத்தின் ஆறாவது கூட்டத்தொடர் கடந்த 9 ஆம் தேதி  முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் கடந்த வாரம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது கேள்வி பதில் நிகழ்வுகள் நடந்து  வருகிறது. இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவையில்  இன்றை கேள்வி நேரத்தில், அரசின் இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் புதிதாக 266 செலிவியர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், கூடுதலாக 300 ஊழியர்களை நியமிக்க அரசு திட்டம் அரசிடம் உள்ளது. அதே நேரத்தில் அவுட்சோர்சிங் கொடுக்கலாமா என அரசு யோசித்து வருவதாகவும் முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார். மேலும் பேசிய அவர், ‘காரைக்கால் திருநள்ளாறில் அரசு மருத்துவக்கல்லூரி தொடங்க மத்திய அரசின் அனுமதியை கேட்டுள்ளோம் என்றும்’ என்றும் முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார். செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன