இலங்கை
33 கிலோ கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது!

33 கிலோ கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது!
திக்வெல்ல – ஊறுகமுவ பகுதியில் 33 கிலோ கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட ஹெரோயின் 66 கோடி ரூபாய் பெறுமதியானது எனத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (19) இரவு காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 41 வயதானவர் எனத் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.