Connect with us

உலகம்

8 இலட்சம் ஆப்கன் மக்களை தாயகம் அனுப்பிய பாகிஸ்தான்!

Published

on

Loading

8 இலட்சம் ஆப்கன் மக்களை தாயகம் அனுப்பிய பாகிஸ்தான்!

சட்டவிரோதமாக பாகிஸ்தானில் குடியேறிய 8 இலட்சம் ஆப்கானிஸ்தான் நாட்டினர் தங்களது தாயகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் சட்டவிரோதமாக குடியேறிய ஆப்கானிஸ்தான் நாட்டினர் மற்றும் ஆப்கான் குடியுரிமை அட்டை உடையவர்களை வருகின்ற மார்ச் 31க்குள் அவர்களது தாயகத்திற்கு திருப்பி அனுப்பும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Advertisement

இதனைத் தொடர்ந்து, தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளதினால் துவங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் இன்று (மார்ச் 20) வரை 8,74,282 ஆப்கன் மக்கள் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில, திருப்பி அனுப்பப்படும் ஆப்கன் மக்களுக்கு தேவையான உணவு மற்றும் மருத்துவ வசதிகள் அனைத்தும் முறையாக வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த நடவடிக்கைகளின்போது அவர்கள் எந்தவொரு பாதிப்புக்கும் உள்ளாகவில்லை என்பதை பாகிஸ்தான் அரசு உறுதி செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், வருகின்ற மார்ச் 31 வரை இந்த திட்டத்திற்கான காலகெடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு பின்னர் எல்லையைக் கடக்கும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

முன்னதாக, நேற்றுமுன்தினம் (மார்ச் 20) ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அமிர் கான் முத்தாகி பாகிஸ்தான் மட்டுமின்றி உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள ஆப்கன் மக்கள் தங்களது தாயகத்திற்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன