Connect with us

தொழில்நுட்பம்

இந்த வார இறுதியில் மறையப் போகும் சனிக்கோளின் வளையங்கள்! – காரணம் என்ன?

Published

on

s

Loading

இந்த வார இறுதியில் மறையப் போகும் சனிக்கோளின் வளையங்கள்! – காரணம் என்ன?

சனி கோளின் வளையங்கள் எல்லாம் இந்த வார இறுதியில் கண்களுக்கு தெரியாது என்று சொன்னால் நம்புவீர்களா? உண்மைதான். சமீபத்திய ஆய்வு படி இந்த வார இறுதிக்கு பிறகு சனிக் கோளைச் சுற்றி இருக்கும் வளையங்களை நம்மால் பார்க்க முடியாது. ஆனால் இதற்கு காரணம் ஏதோ அழிவோ மாற்றமோ இல்லை. இது வெறும் ஒரு மாயைதான். “ring plane crossing” என்று அழைக்கப்படும் இந்நிகழ்வு ஒவ்வொரு 13 முதல் 15 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே ஏற்படுகிறது. வளையங்களை மறைக்கும் காட்சி மாயை: இது எப்படி நிகழும் என்று தானே  யோசிக்கிறீர்கள்.ஒவ்வொரு கோளும் தன்னைத் தானே சுற்றிக்கொண்டும் சூரியனையும் தனிப்பட்ட அச்சில் சுற்றிவருவதும் நமக்குத் தெரியும். கிட்டத்தட்ட ஒரு பம்பரம் சுற்றுவதுபோலதான் இதுவும். அப்படி சனியும் தனக்கான தனித்துவ அச்சில் உருண்டு சுழண்டுகொண்டு இருக்கிறது.நாம் பூமியில் இருந்து பார்க்கும்போது, சனி சுற்றும் நிலைகள் மாறும். அதை நாம் காணும் கோணங்களும் மாறும். இந்த மாற்றம் தான் காட்சி மாயைகளுக்குக் காரணம். சனியைச் சுற்றி ஏராளமான பனிப்பாறைகள், பாறை துகள்கள் மிதந்துகொண்டு இருக்கின்றன. இவை தான் கூட்டாக நமக்கு ஒரு வளையம் போலவும் தட்டு போலவும் தெரிகிறது.சனி பூமியுடன் தற்போது 9 டிகிரி கோணத்தில் சாய்ந்துள்ளது. அதனால் நமக்கு இப்போது அந்த வளையம் தெரிகிறது. பூமியிலிருந்து சனி விலகிச் சென்றதால், சனியின் அச்சு அதன் தற்போதைய சாய்ந்த நிலையில் இருந்து செங்குத்து நிலையைப் பெற்றுள்ளது. அதாவது பூமியும் சனியும் ஒரே கோணத்தில் இருக்கும்.இந்த நேரத்தில் சனியை சுற்றி இருக்கும் பாறைக்குழுக்கள் நிறைந்த வளையம் பரவலாக இல்லாமல் பூமிக்கு இணையாக ஒரு மெல்லிய கிடைமட்ட கோடு  போல தோற்றமளிக்கும். இது இந்த கட்டமைப்பை பார்ப்பதற்கு மிகவும் மெல்லியதாக மாறும்.இந்த காட்சி மாயை காரணமாக 2025 இல் இருந்து சனியின் வளையம் நம் கண்ணனுக்கு புலப்படாது. இந்த நிகழ்வு 2032 வரை நீடிக்கும். அதன் பின்னர் தான் வளையங்களின் அடிப்பகுதி நமது கண்களுக்கு வெளிப்படும் என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.இந்த நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) இரவு 9:34 மணிக்கு இந்திய நேரப்படி நிகழும். Space.com-ன் படி , மத்திய வடக்கு அட்ச ரேகைகளில் வசிப்பவர்களுக்கு, சனி சூரியனுக்கு மிக அருகில் தோன்றும், அதே நேரத்தில் மத்திய தெற்கு அட்சரேகைகளில் வசிப்பவர்களுக்கு வளையங்கள் இல்லாமல் கிரகத்தைப் பார்க்க சிறந்த வாய்ப்புகள் இருக்கும்.சனி கிரகம் சூரியனை 29.4 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுற்றி முடிக்கிறது. 27 டிகிரி அச்சில் சுழலும்போது, ​​சில நேரங்களில் வளையங்கள் ஓடுகளால் மூடப்பட்டிருக்கும், அப்போது பூமியில் உள்ள பார்வையாளர்கள் அவற்றை நன்றாகப் பார்க்கலாம். சனி கிரகத்தின் வளையங்கள் 2,73,600 கிலோமீட்டர்கள் வரை நீண்டுள்ளன, ஆனால் 10 மீட்டர் தடிமன் மட்டுமே உள்ளன. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன