Connect with us

இந்தியா

தடபுடல் பிரியாணி விருந்து, தெளிவாக காய் நகர்த்தும் தளபதி.. மண்டையை பிச்சிக்கும் பெரிய காட்சிகள்

Published

on

Loading

தடபுடல் பிரியாணி விருந்து, தெளிவாக காய் நகர்த்தும் தளபதி.. மண்டையை பிச்சிக்கும் பெரிய காட்சிகள்

ஒரு அரசியல்வாதிக்கு முழு தகுதியே எப்போ எந்த காய நகரத்தினால் சரியாக இருக்கும் என்று யோசித்து செயல்படுவது தான். அதை சரியாக செய்து கொண்டிருக்கிறார் நடிகர் விஜய். எந்த ஒரு அரசியல் பின்புலமும் இல்லாமல் கட்சி ஆரம்பித்து முதல் மாநாடு வெற்றிகரமாக முடித்திருக்கும் போதே தெரிகிறது தளபதி தெளிவாக இருக்கிறார் என்று.

ஆரம்பத்தில் விஜய் கட்சி ஆரம்பிக்கும் பொழுது வழக்கம் போல எல்லா நடிகர்கள் மாதிரி தான் என கணிப்பு வந்தது. ஆனால் தற்போது விஜய் 2026 இல் முதலமைச்சர் ஆவாரா தெரியல, ஆனா கண்டிப்பாக முக்கிய கட்சியாக இருப்பார் என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

Advertisement

ஆரம்பத்தில் இருந்தே விஜய் தன் கட்சியின் ஓட்டு வங்கியை எப்படி பலப்படுத்துவது என்பதில் உஷாராக செயல்பட்டு வருகிறார். முதலில் மாணவர்களை தன் பக்கம் கவனம் திரும்ப வைத்தார். அதைத் தொடர்ந்து தன்னுடைய ரசிகர்களிடம் உங்கள நம்பி உங்கள் விஜய் வந்திருக்கிறேன் என ஒரே போடாக போட்டுவிட்டார்.

பொதுவாக அரசியல் கட்சிகள் மாநாடு நடத்துவதற்கு ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அதில் மாநாட்டை நடத்தி விட்டு டாட்டா காட்டிவிட்டு போய்விடுவார்கள். ஆனால் தமிழக வெற்றி கழகம் அப்படியல்ல. விவசாய நிலங்களை வாடகைக்கு எடுத்து மாநாடு நடந்த பெண் மீண்டும் விவசாயம் நடத்துவதற்கு ஏற்ற மாதிரி அந்த இடத்தை மாற்றி கொடுக்கிறோம் என்று சொல்லி தான் ஒப்பந்தமே போட்டு இருக்கிறார்கள்.

அதை தொடர்ந்து அந்த விவசாயிகளுக்கு என்ன குறை என்று கேட்டு தெரிந்து மாடுகள், ஆடுகள் என இலவசமாக கொடுத்திருக்கிறார்கள். வயிறார சோறு போடுபவர்களை என்றைக்குமே மக்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட மாட்டார்கள்.

Advertisement

அதனால் தற்போது அந்த மாநாடு நடத்துவதற்கு இடம் கொடுத்த விவசாயிகள் மற்றும் அந்த நிலத்தின் உரிமையாளர்களுக்கு பிரியாணி விருந்து வைத்துக் கொண்டிருக்கிறார் நடிகர் விஜய். இன்று காலையிலேயே விக்கிரவாண்டிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் புறப்பட்டு சென்னை வந்தடைந்து விட்டனர்.

இதுவரை வெளியான தகவலின் படி இந்த விழா காலை 10 மணிக்கு ஆரம்பித்திருக்கும் என தெரிகிறது. இவர்கள் முன் விஜய் வந்து பேசுவாரா என்பது இனிவரும் அப்டேட்களை வைத்து தான் தெரியும். இப்படி யாருக்கு என்ன குறை, யாரை எப்படி அணுகினால் சரியாக இருக்கும் என்பதை தெளிவாக செய்து வருகிறார் விஜய். இவர் அடுத்தடுத்து செய்யும் சில விஷயங்களால் பெரிய கட்சிகள் தலையை பிச்சு கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன