Connect with us

பொழுதுபோக்கு

புதிய அத்தியாயத்தில் சீரியல் ஜோடி: இன்ஸ்டாவில் சொன்ன குட் நியூஸ்; வைரல் பதிவு!

Published

on

Kanmani Aswath

Loading

புதிய அத்தியாயத்தில் சீரியல் ஜோடி: இன்ஸ்டாவில் சொன்ன குட் நியூஸ்; வைரல் பதிவு!

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருந்த பாரதி கண்ணம்மா சீரியலில் முதன்மை கேரக்டரான கண்ணம்மாவின் தங்கை அஞ்சலி என்ற கேரக்டரில் நடித்தவர் நடிகை கண்மணி மனோகரன். தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்கள் பட்டாளத்தை பெற்ற இவருக்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. ஒரு கட்டத்தில் கண்மணி மனோகரன் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்தார்.அடுத்து ஜீ தமிழில் அமுதாவும் அன்னலட்சுமியும் என்ற சீரியலில் முதன்மை கேரக்டரில் நடித்திருந்தார். இந்த சீரியலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஜீ தமிழில் சூப்பர் குயின் என்ற ரியாலிட்டி ஷோவில் தனது அம்மாவுடன் பங்கேற்றார் கண்மணி மனோகரன். அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார். ஒரு கட்டத்தில், இந்த சீரியல் முடிவுக்கு வந்த நிலையில், கண்மணி அடுத்து எந்த சீரியலில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.கண்மணி திடீரென தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். சன் டிவியின் மிஸ்டர் மனைவி சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகர் அஸ்வத், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், சீரியல் நடிகராகவும் வலம் வருகிறார். இவர் தொகுத்து வழங்கிய காலை வணக்கம் மற்றும் ரஞ்சிதமே நிகழ்ச்சிகள் நல்ல வரவேற்பை பெற்றது. இவருக்கும் கண்மணி மனோகரனுக்கும் கடந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடைபெற்றது.இந்த திருமணத்தில் சின்னத்திரை பிரபலங்கள் பலர் பங்கேற்ற நிலையில், திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது. தொடர்ந்து திருமணத்திற்கு பின், இருவரும் ரீல்ஸ் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில், சமீபத்தில் புதிதாக கார் வாங்கியதாக இருவரும், தங்கள் சமூகவலைதளங்களில் வெளியிட்டிருந்தனர். இதனிடையே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இவர்கள் திருமணம் நடந்த நிலையில், கண்மணி தற்போது தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார்.A post shared by Kanmani manoharan (@kanmani_manoharan)இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், அடுத்து பெற்றோர் என்ற நிலை திறக்கப்பட்டுள்ளது. எங்கள் குழந்தையை விரைவில் சந்திக்க தயாராகி வருகிறோம். எங்கள் புதிய அத்தியாயம் இப்போது தொடங்குகிறது என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் கண்மணி – அஸ்வத் ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன