Connect with us

பொழுதுபோக்கு

சிறுவயதில் துன்புறுதலுக்கு ஆளானேன்…கசப்பான அனுபவத்தை பகிர்ந்த நடிகை

Published

on

Varalakshmi Sarathkumar14

Loading

சிறுவயதில் துன்புறுதலுக்கு ஆளானேன்…கசப்பான அனுபவத்தை பகிர்ந்த நடிகை

போடா போடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமானவர் தான் வரலட்சுமி சரத்குமார். இதனை தொடர்ந்து தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, சண்டக்கோழி-2, சர்க்கார், மாரி-2 உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் வரலட்சுமி நடித்துள்ளார்.மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் அவர் நடித்துள்ளார். சமீபத்தில் தெலுங்கில் வெளிவந்த ஹனுமன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். மேலும் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுவரும் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக வரலட்சுமி இருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் வரலட்சுமி சரத்குமார் தனக்கு சிறுவயதில் நேர்ந்த கசப்பான அனுபவத்தை பற்றி பகிர்ந்துள்ளார்.அவர் கூறும்போது, “என்னுடைய சிறுவயதில் அப்பா – அம்மா இருவரும் என்னை மற்றவர்கள் வீட்டில் விட்டுவிட்டு வேலைக்குச் சென்று விடுவார்கள். அப்போது 5-6 நபர்களால் நான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன்’ என்று கூறியுள்ளார்.வரலட்சுமியின் இந்த பேச்சு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன