Connect with us

பொழுதுபோக்கு

உண்மையை உடைத்த பிரவுன்மணி: வசமாக சிக்கிய ரோஹினி; இது உண்மையா? இல்ல கனவா?

Published

on

Siragadika Asa

Loading

உண்மையை உடைத்த பிரவுன்மணி: வசமாக சிக்கிய ரோஹினி; இது உண்மையா? இல்ல கனவா?

விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், ரோஹினி எப்போது மாட்டுவார்? முத்து – விஜயா இடையே என்ன பிரச்னை என்பது தொடர்பன கேள்விகளுடன் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே அடுத்த வாரத்திற்கான ப்ரமோ வெளியாகியுள்ள நிலையில், ரோஹினி வசமாக சிக்கிக்கொண்டார்.குடும்ப உறவுகள், பிரச்னைகளை மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டு வரும் சீரியல்களில் தற்போது சிறகடிக்க ஆசை முன்னணியில் இருந்து வருகிறது. விஜய் டிவியின் ப்ரைம்டைம் சீரியலான இதில், ஒரு குடும்பத்தில் அண்ணாமலை விஜயா தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் முதல் மற்றும் 3-வது மகனை அன்புடன் நடத்தும் அம்மா 2-வது மகனை வெறுக்கிறார். இதற்கு காரணம் என்ன என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.அதேபோல், மீனாவை திருமணம் செய்துகொள்ள முடியாது என்று திருமண நாளில் ஓடிப்போன முதல் மகன் மனோஜ், ரோஹினி என்ற பெண்னை திருமணம் செய்துகொண்டான். இதனால் 2-வது மகன் முத்து மீனாவை திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறான். ரோஹின ஏழையாக இருந்தாலும், தனது அப்பா மலேசியாவில் பணக்காரர் என்று பொய் சொல்லி குடும்பத்தை ஏமாற்றி வருகிறார். இதற்காக பிரவுன்மணி என்பவரை தனது மாமாவாக நடிக்க வைத்திருந்தார்.இப்படி ஏமாற்றி வரும் ரோஹினி எப்போது விஜயாவிடம் மாட்டுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், தற்போது அவர் மாட்டிக்கொண்டுள்ளார். அண்ணாமலையின் நண்பர் பரசு வீட்டு திருமணத்தில் பிரவுன் மணி இருந்துள்ளார். அவர் தான் மாப்பிள்ளையின் தாய் மாமா. ஆனால் அண்ணாமலை குடும்பத்தினர் யாரும் அவரை பார்க்காத நிலையில், தற்போது அடுத்த வாரத்திற்கான ப்ரமோ வெளியாகியுள்ளது.இதில் மாலையுடன் என்ட்ரி ஆகும் பிரவுன்மணி, நீங்கள் எல்லோரும் என்னை மன்னிக்க வேண்டும். நான் ரோஹினியின் மாமா இல்லை. உண்யை சொல்லிவிட, அப்போ இவ்வளவு நாள் பொய் சொல்லி ஏமாற்றி வந்தாயா என்று கேட்கும் விஜயா வெளியில் போ என்று துரத்திவிடுகிறார். அத்துடன் இந்த ப்ரமோ நிறைவடைகிறது. இது உண்மையான காட்சியாக அல்லது ரோஹினி கனவு காண்கிறாரா என்பது குறித்து அடுத்த வார எபிசோடுகளில் தெரியவரும்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன