Connect with us

சினிமா

புன்னகையுடன் வந்த சமந்தாவின் கையைப் பிடித்து இழுத்த ரசிகர்…! ஷாக்கில் உறைந்த நடிகை..!

Published

on

Loading

புன்னகையுடன் வந்த சமந்தாவின் கையைப் பிடித்து இழுத்த ரசிகர்…! ஷாக்கில் உறைந்த நடிகை..!

தென்னிந்திய திரையுலகில் சிறந்த நடிப்பு மற்றும் திறமையால் ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்த நடிகை சமந்தா ரூத் பிரபு. இவர் தனது உழைப்பு மற்றும் திறமையால் திரையுலகு மற்றும் சமூக ஊடகங்களில் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். ஹீரோயினாக மட்டும் இல்லாமல் பவர்புல் லேடியாகவும் உருவெடுத்துள்ள சமந்தா, சமீபத்தில் தனது ஆரோக்கிய பிரச்சனைகளை எதிர்கொண்டு வெற்றிகரமாக அதிலிருந்து மீண்டுள்ளார்.அந்த மீட்பு பயணத்தின் பின், இப்போது மீண்டும் சமூக நிகழ்ச்சிகள் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்புகள் எனப் பலவற்றில் கலந்து கொண்டு வருகின்றார். இந்நிலையில், சமந்தா சமீபத்தில் பங்கேற்ற நிகழ்ச்சியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் தற்பொழுது இணையத்தளங்களில் வைரலாகி வருகின்றது.சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமந்தா சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தார். அந்த நிகழ்விற்கு வருகை தந்த சமந்தா, தனது காரிலிருந்து இறங்கிய வேளை அங்கு பொதுமக்கள் மற்றும் மீடியா என அனைவரும் திரண்டுவந்தனர்.அந்த தருணத்தில், ஒரு அடையாளம் தெரியாத நபர் எதிர்பாராத விதமாக  சமந்தாவின் கையைப் பிடித்து இழுத்துள்ளார். அதன் போது, குழப்பத்துடன் அந்த இடத்தை விட்டு சமந்தா விலகி நின்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டு தற்பொழுது வைரலாகி வருகின்றது. இதனைப் பார்த்த சமந்தா ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்நிலையில், சமந்தா இதுவரை இந்த சம்பவம் குறித்து எந்த விதமான பதிலும் வெளியிடவில்லை. திரையுலகத்தில் பெண்கள் பிரபலங்களாக வலம் வருவது இன்று சாதாரணமாகிவிட்டாலும், அவர்களது பாதுகாப்பு மற்றும் தனிமனித உரிமைகள் குறித்து கவனமாக இருக்க வேண்டியது தற்போது மிகவும் முக்கியமானதொன்றாக காணப்படுகின்றது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன