சினிமா
சிவகார்த்திகேயனுடன் இணையும் புதிய இயக்குநர்..! ரசிகர்களுக்கு ரெடியாகும் மாஸான ரீட்!

சிவகார்த்திகேயனுடன் இணையும் புதிய இயக்குநர்..! ரசிகர்களுக்கு ரெடியாகும் மாஸான ரீட்!
மலையாள திரைப்பயணத்தில் தனது தனித்துவத் திறமையால் பல படங்களை உருவாக்கியதுடன் இந்திய சினிமாவின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராக திகழ்பவர் பிரித்விராஜ் சுகுமாரன். இவர் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் எனப் பல முகங்களைக் கொண்ட இவரது அடுத்த பக்கம் தற்போது தமிழ் சினிமாவை நோக்கிக் காணப்படுகின்றது.சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் தன்னுடைய திரைப்படங்களிலுள்ள சில உணர்ச்சி காட்சிகள் எப்படி உருவாகின்றன என்பதையும், ரஜினிகாந்தின் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை தழுவியே ஒரு படத்தில் காட்சியை அமைத்ததாகவும் பகிர்ந்துள்ளார். இது தற்போது ரசிகர்கள் மற்றும் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரித்விராஜ் கூறியதாவது, “நான் ரஜினிகாந்த் சார் அவர்களிடம் ஒரு சந்தர்ப்பத்தில் பேசிக் கொண்டிருந்த போது அவர் தன் வாழ்க்கையில் ஒரு முக்கியமான தருணத்தைப் பகிர்ந்தார். அவருடைய மகள் சிறுவயதில் பள்ளிக்கூடத்தில் நடந்த ஒரு விடயத்தால் மிகவும் மனவேதனை அடைந்தார். அந்த நேரத்தில் அவர் எப்படி ஒரு தந்தையாக அந்த சூழ்நிலையை எதிர்கொண்டு, தனது குழந்தைக்கு உறுதியும் நம்பிக்கையும் கொடுத்தார் என்பதை ரஜினி கூறினார். அந்த உணர்வு எனக்கு மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தியது,” என்றார். இதனாலேயே அவரது கதையை வைத்துப் படம் எடுக்கவேண்டும் என்று ஜோசித்ததாகவும் கூறினார்.அதே நேரத்தில், தமிழில் சினிமா ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு தகவலை பிரித்விராஜ் கூறியிருந்தார். அதாவது, சிவகார்த்திகேயனை வைத்து ஒரு தமிழ் படம் இயக்கவிருக்கின்றேன் என்றார். அத்துடன் இம்முயற்சியை விரைவில் தொடங்கப் போவதாகவும் கூறியுள்ளார்.இந்த தகவல்கள் வெளியாகியதிலிருந்து, தமிழ் மற்றும் மலையாள சினிமா ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. பிரித்விராஜ் இயக்கும் படம் என்றாலே அது ஒரு தரமான கலைப்படைப்பாகத் தான் இருக்கும். அதனுடன் சிவகார்த்திகேயன் போன்ற ஹீரோ இணைந்தால் அந்தப் படம் சிறப்பாகத் தான் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.