Connect with us

இந்தியா

நீதிபதி வர்மா வழக்கு: சம்பவ இடத்தில் இருந்த 5 போலீசார் செல்போன் ஒப்படைப்பு; விசாரணை தீவிரம்

Published

on

s

Loading

நீதிபதி வர்மா வழக்கு: சம்பவ இடத்தில் இருந்த 5 போலீசார் செல்போன் ஒப்படைப்பு; விசாரணை தீவிரம்

மார்ச் 14-ம் தேதி இரவு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டபோது, சம்பவ இடத்தில் தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட 5 போலீசார் தங்களது செல்போன்களை டெல்லி காவல்துறை தலைமையகத்தில் ஒப்படைத்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.நீதிபதி யஷ்வந்த் வீட்டில் தீ விபத்தின்போது கட்டுக்கட்டாக பணம் சிக்கியது தொடர்பாக, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவால் அமைக்கப்பட்ட 3 பேர் அடங்கிய நீதிபதிகள் குழு விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளது. திங்களன்று காலை, துக்ளக் சாலை காவல் நிலையத்தின் நிலைய அதிகாரி உட்பட 5 போலீசார் டெல்லி காவல் ஆணையர் சஞ்சய் அரோரா அழைத்து, விசாரணைக்கு ஒத்துழைக்குமாறும், எந்த தகவலையும் வெளியிடுவதில் தயங்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது. 5 பேரில் எஸ்.எச்.ஓ., ஒரு துணை ஆய்வாளர், 2 தலைமைக் காவலர்கள் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் ஆகியோர் அடங்குவர். தலைமைக் காவலரில் ஒருவர் விசாரணை அதிகாரியாகவும் (ஐ.ஓ.) உள்ளார்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்நீதிபதியின் இல்லத்துடன் இணைக்கப்பட்ட ஒரு சேமிப்பு அறையில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் குறித்த விவரங்களைக் கோரி டெல்லி காவல்துறை திங்கள்கிழமை டெல்லி தீயணைப்புத் துறைக்கு கடிதம் எழுதியது. தொடர்ந்து, தீ விபத்து சம்பவம் குறித்து புதுடெல்லி மாவட்ட காவல்துறை 2 அறிக்கைகளைத் தயாரித்து காவல்துறைக்கு சமர்ப்பித்தது. தீ விபத்து நடந்த இரவு, நீதிபதியின் தனி உதவியாளர் தொலைபேசியில் ஒரு அழைப்பு மேற்கொண்டதாகவும், போலீஸ் வருவதற்கு முன்பு 2 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்தை அடைந்ததாகவும் ஒரு அறிக்கை கூறுகிறது. NDMC மற்றும் CPWD அதிகாரிகள் நீதிபதியின் இல்லத்திற்கு வந்ததாகவும், தீயை அணைக்க சுமார் 20 நிமிடங்கள் ஆனது என்றும் அறிக்கை கூறுகிறது.கடந்த 6 மாதங்களாக நீதிபதி வர்மாவின் இல்லத்தில் பணியாற்றி வந்த பாதுகாப்புப் பணியாளர்களின் விவரங்களையும், அதே காலகட்டத்திற்கான அவரது அழைப்பு விவரப் பதிவுகளையும் டெல்லி காவல்துறை டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து, இந்த விவரங்களைக் கோரி தலைமை நீதிபதி அலுவலகம் காவல்துறைத் தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தது.திங்களன்று, உச்சநீதிமன்றம் நீதிபதி வர்மாவை அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு கொலிஜியம் பரிந்துரைத்தது.நீதிபதி வர்மா தனது வீட்டில் இருந்த ஊழியர்களிடம் எந்தப் பணமும் காட்டப்படவில்லை என்று கூறுகிறார். “நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டபோது, ​​எனது மகள் மற்றும் எனது தனிச் செயலாளர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர், அவர்களின் அழைப்புகள் முறையாகப் பதிவு செய்யப்படும். தீயை அணைக்கும் பணியின் போது, ​​பாதுகாப்பு காரணங்களுக்காக அனைத்து ஊழியர்களும் எனது வீட்டு உறுப்பினர்களும் சம்பவ இடத்தை விட்டு நகருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். தீ அணைக்கப்பட்ட பிறகு, அவர்கள் சம்பவம் நடந்த இடத்திற்குத் திரும்பிச் சென்றபோது, ​​அங்கு எந்த பணமோ அல்லது நாணயமோ இல்லை,” என்று டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அளித்த பதிலில் அவர் கூறினார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன