இலங்கை
ஒரு கிலோ அரிசியால் பறந்தது ரூபா 100,000

ஒரு கிலோ அரிசியால் பறந்தது ரூபா 100,000
யாழ்ப்பாணத்தில் உள்ள பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் ஒன்றுக்கு, கட்டுப்பாடு விலையை மீறிய வகையில் விற்பனை செய்த ஒரு கிலோ அரிசிக்காக ஒரு லட்சம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தால், கட்டுப்பாட்டு விலையை மீறிய வகையில் அரிசி விற்பனை செய்யப்படுவதாக பாவனையாளர் அதிகார சபைக்கு தொடர்ச்சியாக முறைப்பாடுகள் வழங்கப்பட்டு வந்தன. இந்த முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, கட்டுப்பாட்டு விலையை மீறிய வகையில் அரிசி விற்பனை செய்தமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து, பாவனையாளர் அதிகார சபையால் கடந்த வருடத்தின் இறுதியில் அந்தப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைகள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இடம்பெற்றுவந்தன. வழக்கின் மீதான தீர்ப்பு பதில் நீதவான் ஷாலினி ஜெயபாலச் சந்திரனால் வழங்கப்பட்டது. இதன்போதே, தொடர்புடைய பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்கு ஒரு லட்சம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது. தண்டப் பணத்தை குறித்த பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினர் உடனடியாகவே செலுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.