இலங்கை
மன்னார், பூநகரிக்கு வேட்புமனுக்கள் ஏற்பு

மன்னார், பூநகரிக்கு வேட்புமனுக்கள் ஏற்பு
மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டிய ஆகிய மூன்று பிரதேசசபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணி நேற்றுமுதல் ஆரம்பித்துள்ளது.
வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் எதிர்வரும் 27ஆம் திகதியுடன் முடிவடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற நடவடிக்கைகள் காரணமாக மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தாமதமானமை குறிப்பிடத்தக்கது.