தொழில்நுட்பம்
ஒப்போ எஃப்-29 சீரிஸ்: அனைத்து தொழிலாளர்களுக்கும் ஏற்ற வாட்டர் ப்ரூஃப் போன்… கோவையில் அறிமுகம்

ஒப்போ எஃப்-29 சீரிஸ்: அனைத்து தொழிலாளர்களுக்கும் ஏற்ற வாட்டர் ப்ரூஃப் போன்… கோவையில் அறிமுகம்
கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள தனியார் உணவக அரங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சாம்பியன் ஒப்போ எப்-29 சீரிஸ் குறித்தும், சிறப்பம்சங்கள் குறித்தும் இந்தியா தயாரிப்பு தொடர்புத் தலைவர் சவியோ டி’சோசா கூறியதாவது:ஒப்போ இந்தியா நெட்வொர்க் நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ள இந்தப் புதிய போன், நீடித்து உழைக்கும் தன்மையை மறுவரையறை செய்துள்ளதாகவும், உலகத்தரம் வாய்ந்த என்ஜினீயரிங், ராணுவத் தரத்திலான கடினத்தன்மை, மேம்பட்ட இணைப்பு, வலுவான பேட்டரி செயல் திறன் ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது என்றார். கேரளாவின் பருவமழை, ராஜஸ்தானின் கொளுத்தும் வெப்பம், காஷ்மீரின் கடுங்குளிர் என நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள கால சூழ்நிலைக்கு ஏற்ற வகையில், மாநிலங்களுக்கு ஏற்ற கடுமையான சூழல்களைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார். பெங்களூருவில் உள்ள எஸ்.ஜி.எஸ் நிறுவனத்தால், தரநிலைகளுக்கு எதிராக சோதிக்கப்பட்டது அப்போது, எப்-29 சீரிஸ் ஒப்போ அலைபேசிகள், மிகவும் உறுதியான ஸ்மார்ட்போனாகத் தேர்வு செய்யபட்டு, அதன் ஐ.பி-66 என்ற. தரமதிப்பீடு வழங்கபட்டுள்ளது. இந்த வகை அலைபேசிகள் தண்ணீரிலும் கடும் குளிரிலும், சூடான திரவங்களில் விழுந்தாலும் எந்த வித பாதிப்பும் இல்லாமல் இயங்கும் நிலையில் பல்வேறு சோதனைகளை கடந்துள்ளது என்றார். பலமணி நேரம் நீரில் மூழ்கினாலும், சில மணி துளிகளில், ஸ்பீக்கரிலிருந்து தண்ணீரை வெளியேற்ற ஒரு தனித்துவமான துடிக்கும் ஒலியை வெளியிட்டு தண்ணீரை வெளியேற்றி அலைபேசிக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத நிலையில் வடிவமைக்கபட்டுள்ளதுஎன்று இவ்வாறு தெரிவித்தார்,செய்தி: பி.ரஹ்மான், கோவை