Connect with us

உலகம்

கார்ட்டூம் விமான நிலையத்தை துணை இராணுவத்திடமிருந்து மீட்டது சூடான் இராணுவம்!

Published

on

Loading

கார்ட்டூம் விமான நிலையத்தை துணை இராணுவத்திடமிருந்து மீட்டது சூடான் இராணுவம்!

சூடானின் இராணுவம், துணை இராணுவ விரைவு ஆதரவுப் படைகளிடமிருந்து (RSF) கார்ட்டூம் விமான நிலையத்தை மீட்டெடுத்துள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் அதனை முழுமையாகப் பாதுகாத்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Advertisement

சூடான் தலைநகரில் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளையும் இராணுவ வீரர்கள் இன்று புதன்கிழமை சுற்றி வளைத்தனர்.

சூடானில் 2021 ஆம் ஆண்டு இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதைத் தொடர்ந்து தலைவராக
இராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயற்பட்டு வருகிறார்.

அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின் துணைத்தலைவராக துணை இராணுவப்படையின் தளபதியான ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ செயற்பட்டு வருகிறார்.

Advertisement

துணை இராணுவத்தின் படைப்பிரிவுகளில் ஒன்றான அதிவிரைவு ஆதரவு படையினரை இராணுவத்துடன் இணைக்க இராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் முயற்சி மேற்கொண்தைத் தொடர்ந்து துணை இராணுவப்படையின் அதிவிரைவு ஆதரவு படையினர் தரப்பில் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

இதனால், இராணுவத்திற்கும், துணை இராணுவத்திற்கும் இடையே கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி முதல் மோதல் ஏற்பட்டது.

துணை இராணுவத்தின் அதிவிரைவு ஆதரவு படையினர் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதில்
தாக்குதலும் இடம்பெற்று வரும் நிலையில் மோதலில் பொதுமக்களும் உயிரிழக்கின்றமை கவலைக்குரிய விடயமாகும்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன