Connect with us

இலங்கை

மின்சாரம் மற்றும் டீசல் மாபியாவில் அரசாங்கம் சிக்கியுள்ளது!

Published

on

Loading

மின்சாரம் மற்றும் டீசல் மாபியாவில் அரசாங்கம் சிக்கியுள்ளது!

2/3 பெரும்பான்மையையும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியையும் வைத்துக் கொண்டு பணியை சரியாக செய்ய முடியாமல் புலம்பிக்கொண்டு கிராமத்து அதிகாரத்தையும்  கேட்கின்றனர்.

நாட்டுக்கு என்ன நேர்ந்துள்ளது என்று வீதியில் இறங்கி மக்களிடம் கேட்டால் பதில் வழங்குவார்கள்.

Advertisement

மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். மக்கள் விரக்தியடைந்துள்ளனர். பொய் வென்று உண்மை தோற்றுவிட்டது. இன்று மக்கள் வாழ முடியாத நிலையில் வருமானம் இல்லாமல் மூன்று வேளை கூட சரியாக சாப்பிட முடியாத நிலையை அடைந்துள்ளனர். இதனால் பாடசாலை மாணவர்கள் கூட பாதிக்கப்பட்டுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பால் மா விலைகளும், பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. இவ்வேளையில் அரசாங்கம் அழுது புலம்புக்கிக் கொண்டிருக்கிறது. தேங்காய் தட்டுப்பாட்டுக்கு குரங்கு தான் காரணமாம். நாய்களுக்கு சோறு போடுவதே அரிசி தட்டுப்பாட்டுக்கு காரணமாம். இதனால் ஒன்றுமே செய்ய முடியாது என புலம்புகின்றனர்.

தெளிவான மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும், நிறைவேற்று அதிகாரத்தையும் வைத்துக் கொண்டு பணியாற்ற முடியாது, கிராமத்து அதிகாரத்தையும் கோருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Advertisement

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்களுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

அரிசி, தேங்காய் விலைகளின் விலைகளும் கிடுகிடுவென அதிகரித்து, மக்களால் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொறுப்பற்ற விதமாக கேலி செய்து வருகின்றனர். 

மீண்டும் மீண்டும் பொய் சொல்லி மக்களை ஏமாற்றி நாடு பாழாகியிருக்கும் வேளையில், போதா குறைக்கு கிராமத்தின் அதிகாரத்தையும் கேட்கின்றனர். நாட்டுக்கு சேவையாற்ற போதுமான அதிகாரத்தை மக்கள் தெளிவாகவே இந்த அரசாங்கத்திற்கு பெற்றுத் தந்துள்ளனர். அடுத்தவர் மீது பழி போடுவதை விடுத்து செய்து காட்டுங்கள்.

Advertisement

மின்சாரம் மற்றும் டீசல் மாபியாவில் அரசாங்கம் சிக்கியுள்ளது.

தற்போது மின்சார மாபியா நாட்டையே ஆட்கொண்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நாட்டிற்கும், நுகர்வோருக்கும், சுற்றுச்சூழலுக்கும் நன்மை பயக்கும். என்றாலும், நமது நாட்டிலிருந்து சூரிய சக்தியை ஒழிக்கத் தேவையான அனைத்து திட்டங்களையும் வகுத்து தயார் நிலையில் வைத்துள்ளனர்.

மேற்கூரை சூரிய மின்சக்திக்கான கட்டண விகிதம் குறைக்கப்பட்டு, டீசல் மாபியாவுக்கும், எரிபொருள் மாபியாவுக்கும் இடமளித்துள்ளனர். இந்த மாபியாவுக்கு இடமளிக்க முடியாது. சூரிய ஆற்றல், காற்றாலை மற்றும் நீர் மின்சாரம் இன்னும் அதிகமாக இயக்கப்பட வேண்டும். 

Advertisement

தேர்தல் காலத்தில் அரசாங்கம் என்னதான் பேசினாலும், இன்று டீசல் எரிசக்தி மாபியாக்களினது அடிமைகளாக மாறியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன