சினிமா
விஜய் தவழுகின்ற குழந்தை..!– சேகர்பாபு கருத்தால் கொந்தளித்த ரசிகர்கள்..!

விஜய் தவழுகின்ற குழந்தை..!– சேகர்பாபு கருத்தால் கொந்தளித்த ரசிகர்கள்..!
தமிழக அரசியலில் இன்று அதிகளவில் பேசப்படும் தலைப்புகளில் ஒன்றாக த.வெ.க தலைவர் விஜயின் சமீபத்திய அரசியல் கருத்துக்கள் மற்றும் அதற்கு சேகர்பாபு கொடுத்த பதிலடி என்பன சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.அரசியலில் புதிதாகக் காலடி வைத்துள்ள விஜய், சமீபத்தில் நடந்த பொதுக்கூட்டங்களில் வலுவான மற்றும் சில நேரங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளையும், விமர்சனங்களையும் பதிவு செய்து வருகின்றார். விஜய், சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “மன்னாராட்சி போல செயல்படும் ஆட்சியை தாங்க முடியவில்லை. இளைஞர்கள் மாற்றத்துக்கு தயாராக வேண்டும் ” எனத் தெரிவித்துள்ளார். விஜயின் இக்கருத்துக்களுக்கு, சேகர்பாபு தன்னுடைய பதிலடியை மிகவும் கடுமையான சொற்களில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “அவர் இன்னும் தவழுகின்ற குழந்தை. அரசியலுக்கு புதிதாக வந்திருக்கின்றார். சமூகத்தைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு அவர் வளரவில்லை. தமிழ் மக்கள் யாரை நிராகரிக்க வேண்டும், யாரை நம்ப வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும்” எனவும் கூறியுள்ளனர். இதற்கு விஜய் ரசிகர்கள், “அவர் பேசும் நேர்மையான விமர்சனங்கள் சிலருக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் இப்படி குழந்தை எனக் கூறுகிறார்கள்” எனக் கமெண்ட் செய்து வருகின்றனர்.