Connect with us

இலங்கை

ஒரே நேரத்தில் இரு பெண்களை திருமணம் செய்த இளைஞர்; இணையத்தில் வைரல்

Published

on

Loading

ஒரே நேரத்தில் இரு பெண்களை திருமணம் செய்த இளைஞர்; இணையத்தில் வைரல்

 இந்தியாவின் தெலுங்கானாவில் பழங்குடி இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் 2 பெண்களை திருமணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஆசிபாபாத் மாவட்டம் கும்னூர் கிராமத்தைச் சேர்ந்த 25 வயதான சூரியதேவ், ராஜ் கோண்ட் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்.

Advertisement

இவர் லால் தேவி மற்றும் ஜல்கர் தேவி என்ற 2 பெண்களை ஒரே நேரத்தில் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், தனது 2 காதலிகளையும் ஒரே மேடையில் வைத்து சூரியதேவ் திருமணம் செய்துள்ளார்.

இந்த திருமணத்தில் 500இற்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டதாக கூறப்படும் நிலையில் சூரியதேவின் திருமண வீடியோ இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன