Connect with us

பாலிவுட்

பல நூறு கோடி மதிப்பிலான ஈஷா அம்பானியின் அரண்மனை.. யப்பா! இவ்ளோ ஆடம்பரமா?

Published

on

Loading

பல நூறு கோடி மதிப்பிலான ஈஷா அம்பானியின் அரண்மனை.. யப்பா! இவ்ளோ ஆடம்பரமா?

இந்தியாவில் டாப் பணக்காரர்களில் முதலிடத்தில் இருப்பவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவராக பல்வேறு தொழில்களில் பிஸினஸ் மேற்கொண்டு வெற்றிகரமான தொழிலதிபராகவும், ஆசியாவின் நம்பர் 2 பெரும் பணக்காரராகவும் வலம் வருகிறார்.

இந்த நிலையில், உலகின் மதிப்புமிக்க வீடுகளில் ஒன்றாகத் திகழ்வது முகேஷ் அம்பானியின் மும்பையில் உள்ள அண்டில்லா வீடு. இது வீடு என்று கூறினாலும் 7 ஸ்டார் ஓட்டலைவிட அதிக வசதிகள் ஒரு குடும்பத்தினர் தங்குவதற்காக இருப்பது அனைவருக்கும் ஆச்சயர்த்தை ஏற்படுத்தும் ஒன்றாக உள்ளது.

Advertisement

இந்த நிலையில், முகேஷ் அம்பானியின் ஒரே மகள் இஷா அம்பானிக்கு திருமணமாகி தற்போது தன் கணவர் ஆனந்த் பிரமலுடன் குலிதா எனும் வைர வடிவிடலான வீட்டில் வசித்து வரும் நிலையில், இந்த வீட்டில் என்னென்ன வசதிகள் இருக்கிறது என்பதை இக்கட்டுரையில் பார்க்கலாம்.

தன் தந்தையின் வீடே 27 மாடிகள் கொண்ட சொகுசு வீடாக உலகமே அறியப்பட்டாலும் தற்போது இஷா அம்பானி ரூ.1100 கோடி மதிப்புடைய அரண்மனையில் வாழ்த்து வருகிறார். அதாவது, கடந்த 2018 ஆம் ஆண்டு, இஷா அம்பானி, ஆனந்த் பிரமலை திருமணம் செய்த பின்பு, இந்த அரண்மையை ஆனந்தின் பெற்றோர் அஜய் – சுவாதி பிரமல் தம்பதியர் திருமண பரிசாக இதை வழங்கினர்.

இந்த அரண்மனையில் இருந்தபடியே, அரேபிய கடலின் கண்கொள்ளா காட்சியைக் காண முடியும். இந்த அரண்மனை 50 ஆயிரம் சதுர அடி கொண்ட பெரிய பரப்பளவாகும். இந்த கட்டிடத்தை கந்த 12 அண்டுகளுக்கு முன்பு ஹிந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனத்தின் வசம் இருந்த நிலையில், பார்க்கவே அழகாகவும் ஆடம்பரமாகவும் இருக்கும் இந்த அரண்மனையை ஆனந்த் பிரமலின் பெற்றோர் ரூ.500 கோடிக்கு அதாவது 61.2 மில்லியன் டாலருக்கு வாங்கினர். இது தற்போது ரூ.1100 மதிப்புடையதாக உள்ளது.

Advertisement

இந்தக் கட்டிடத்தை லண்டனைச் சேர்ந்த இன்ஜினியரிங் நிறுவமனான எக்கர்ஸ்லில் ஓ கல்லாகன் இக்கட்டிடத்தை மேலும் அழகான அரண்மனையாக மாற்றிக் கொடுத்தார். இதில், ஒரு நீச்சல் குளம், தோட்டம், பாதாள அறைகள் 3 கொண்டிருக்கும் நிலையில், உயர்தர மரங்களினால் செய்யப்பட்ட நாட்காலிகள், இண்டீரியர் வசதிகள் விலை உயர்ந்த பொருட்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன