சினிமா
குக்கு வித் கோமாளி அஸ்வின் திரையுலகிலிருந்து விலகி விட்டாரா..?ரசிகர்களை வியக்கவைத்த தகவல்!

குக்கு வித் கோமாளி அஸ்வின் திரையுலகிலிருந்து விலகி விட்டாரா..?ரசிகர்களை வியக்கவைத்த தகவல்!
‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலமாக பெரிய அளவிலான ரசிகர்களை உருவாக்கிய அஸ்வின், அந்த நிகழ்ச்சியில் தனது தனித்துவமான காமெடியாலும், இயல்பான நடிப்பாலும் அனைவரது மனங்களையும் கவர்ந்தார். அந்த நிகழ்ச்சியின் வெற்றி, அவரை சின்னத்திரையிலிருந்து நேராக வெள்ளித்திரைக்கு அழைத்துச் சென்றது.’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த அஸ்வின், தன்னைச் சுற்றிப் பரவி வரும் வதந்திகளுக்கு ஒரு வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார். அதன்போது அவர் “நான் சினிமாவிலிருந்து விலகவில்லை ” எனத் தெளிவாகக் கூறியுள்ளதுடன் விரைவில் பல புதிய படங்கள் வெளியாக உள்ளதாகவும் கூறியுள்ளார். இது கடந்த சில காலமாக அவர் எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காதது தொடர்பாக மக்கள் மத்தியில் எழுந்த வதந்திகளுக்கு அவர் நேரடியாக பதிலளித்ததாக காணப்படுகின்றது.அஸ்வின் சினிமா உலகில் சில காலம் காணப்படாமல் இருந்தது நிச்சயமாக ரசிகர்கள் மத்தியில் பெரிய கேள்விக் குறியாக இருந்தது. அந்தவகையில் தற்பொழுது வெளியான வீடியோ அதனைத் தெளிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.