சினிமா
“அவரிடம் செயற்கையாக எதுவும் இல்லை”.. கணவர் குறித்து மனம் திறந்து பேசிய அதிதி ராவ்

“அவரிடம் செயற்கையாக எதுவும் இல்லை”.. கணவர் குறித்து மனம் திறந்து பேசிய அதிதி ராவ்
நடிகை அதிதி ராவ் கடந்த ஆண்டு நடிகர் சித்தார்த்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது.இந்த நிலையில் தற்போது தனது கணவர் குறித்து நடிகை அதிதி ராவி மனம் திறந்து பேசியுள்ளார்.”அவரை திருமணம் செய்துகொள்ள நான் ஒரு நொடி கூட யோசிக்கவில்லை. அவர் அப்படிப்பட்ட ஒரு மனிதர். ஒரு நல்ல மனிதர். அவரிடம் செயற்கையாக எதுவும் இல்லை. நீங்கள் பார்ப்பது போல தான் அவர். மேலும் அவர் மிகவும் அன்பானவர்.””எனக்கு நெருக்கமானவர் என ஒருவரை பற்றி தெரிந்தால், அவர்கள் எல்லோரையும் ஒன்றாக வரவைத்துவிடுவார். அப்படிதான் நான் வளர்ந்தேன், அது எனக்கு நிஜமாகவே பிடிக்கும்” என கூறி இருக்கிறார்.