சினிமா
15 ஆண்டுகளின் பின் இணையும் வடிவேலு -சுந்தர்சி கூட்டணி..! மாஸாக வெளியாகிய டிரெய்லர்..

15 ஆண்டுகளின் பின் இணையும் வடிவேலு -சுந்தர்சி கூட்டணி..! மாஸாக வெளியாகிய டிரெய்லர்..
சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு நடித்து வந்த படங்கள் எப்போதும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. “வின்னர்”, “தலைநகரம்”, “நகரம் மறுப்பக்கம்” போன்ற படங்களில் அவரின் காமெடி கதாபாத்திரங்கள் ரசிகர்களின் மனங்களை கவர்ந்தவை. இந்நிலையில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சுந்தர்.சி மற்றும் வடிவேலு இணைந்து ஒரு புதிய படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் பெயர் “கேங்கர்ஸ்” இதில் வடிவேலுவுடன் சுந்தர்.சி, கேத்ரின் தெரசா, வாணி போஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.மேலும், இந்தப் படத்தில் வடிவேலு லேடி கெட்டப்பில் நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாகி உள்ளது. “கேங்கர்ஸ்” படம் ஏப்ரல் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் டிரெய்லர் படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே பெரிய வரவேற்பினை பெற்றுள்ளதுடன் வெளியாகி ஒரு சில மணித்தியாலங்களில் அதிகபட்ஷ பார்வையாளர்களை பெற்றுள்ளது.