Connect with us

இலங்கை

மருதங்கேணியில் உள்ள பாதுகாப்பு இல்லம் தொடர்பான கலந்துரையாடல்!..

Published

on

Loading

மருதங்கேணியில் உள்ள பாதுகாப்பு இல்லம் தொடர்பான கலந்துரையாடல்!..

மருதங்கேணியில் இயங்கிவருகின்ற பாதுகாப்பு இல்லம் (Safe House) தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன்  தலைமையில் இன்றைய தினம் (01.04.2025) காலை 10.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. 

இக் கலந்துரையாடலில் பாதுகாப்பு இல்லத்தில் தங்கியுள்ளவர்களுக்கான உணவு வசதிகள், பாதுகாப்பு போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் அரசாங்க அதிபர் தலைமையில் ஆராயப்பட்டது. 

Advertisement

இக் கலந்துரையாடலில் பிரதம கணக்காளர், மருதங்கேணி பிரதேச செயலாளர், உதவி மாவட்டச் செயலாளர், மாவட்ட மற்றும் மருதங்கேணி பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், யாழ் சமூக செயற்பாட்டு மையத்தின் அலுவலகர்கள் உள்ளிட்ட தொடர்புடைய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர். (ப)

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன