Connect with us

சினிமா

ஷாலினி பாண்டேயிடம் அத்துமீறிய இயக்குநர்…!உண்மையைப் போட்டுடைத்த நடிகை..!

Published

on

Loading

ஷாலினி பாண்டேயிடம் அத்துமீறிய இயக்குநர்…!உண்மையைப் போட்டுடைத்த நடிகை..!

திரை உலகில் சில நடிகைகள் எதிர்கொள்ளும் கடினமான அனுபவங்களைப் பற்றித் தினமும் சமூக வலைத்தளங்களில் வெளிவரும் உண்மைகள் மக்களைப் பதற வைக்கின்றன. அத்தகைய தகவல் ஒன்றினை நடிகை ஷாலினி பாண்டே சமீபத்தில் வெளியிட்டு அனைத்து ரசிகர்களையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளார்.தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் சமீப காலங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் ஷாலினி பாண்டே. ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்ற இவர், அதன் பின் பல தெலுங்கு மற்றும் ஹிந்திப் படங்களில் நடித்துள்ளார்.சமீபத்திய நேர்காணலில் ஷாலினி பாண்டே தன்னுடைய நடிப்புப் பயணத்தில் நிகழ்ந்த ஒரு தீய அனுபவம் குறித்துத் தற்பொழுது பகிர்ந்துள்ளார். அதில், ஒரு தெலுங்கு படத்தின் இயக்குநர் தன்னிடம் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டதாகக் கூறியுள்ளார்.மேலும் “அவ்வேளை எனக்கு 22 வயசு தான் என்றதுடன் ஒரு படப்பிடிப்பின் போது கேரவனில் நான் உடை மாற்றிக்கொண்டிருந்தேன். அப்போது அந்த இயக்குநர் கதவைத் தட்டாமலேயே உள்ளே வந்தார். நான் அதிர்ச்சி அடைந்து விட்டேன்” எனக் கூறியுள்ளார்.எனினும் இந்த அனுபவத்தை ஷாலினி பாண்டே பகிர்ந்தாலும் அந்த இயக்குநரின் பெயரை அவர்  குறிப்பிடவில்லை. அந்த அனுபவம் தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, “ஒரு குழந்தையைப் போல திரைக்கு வந்திருந்த என்னிடம் இதுபோன்ற சம்பவம் பதற்றத்தையும்  கோபத்தையும் ஏற்படுத்தியது என்றார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன