இந்தியா
இரு சக்க வாகனத்தில் மது பாட்டில்கள் கடத்தல்: புதுச்சேரியில் தமிழக பெண் கைது

இரு சக்க வாகனத்தில் மது பாட்டில்கள் கடத்தல்: புதுச்சேரியில் தமிழக பெண் கைது
புதுச்சேரியில் இருந்து இ.சி.ஆர்., வழியாக தமிழகப்பகுதிக்கு ஸ்கூட்டியில் மதுபாட்டில்கள் கடத்திய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி, கோட்டக்குப்பம் கலால் இன்ஸ்பெக்டர் மீனா தலைமையில் தலைமை காவலர்கள் செல்வம், வெங்கடேசன், பாண்டியன் ஆகியோர் கீழ்புத்துப்பட்டு பஸ் நிறுத்தம் அருகில் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது, புதுச்சேரியில் இருந்து இ.சி.ஆர்., வழியாக சென்னை நோக்கி சென்ற பெண்ணின் இருசக்கர வாகனத்தை நிறுத்தி போலீசார் விசாரித்தனர்.இந்த சோதனையின் போது அவரிடம் காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது அவர் முரணான பதில்களை கூறவே, போலீசார் அவரது பைக்கை ஆய்வு செய்தனர். அப்போது, சீட்டுக்கு அடியில், 96 புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தி சென்றது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், அவர் செய்யூர் தாலுகா வெள்ளகொண்ட அகரம் கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகள் ரேவதி, 35; என்பது தெரிவந்தது.மேலும் புதுச்சேரி கனகசெட்டிக்குளம் பகுதியில் இருந்து மதுபாட்டில்கள் வாங்கி சென்று, தமிழகப்பகுதியில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் ரேவதியை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். மேலும், அவரிடம் இருந்த 96 மதுபாட்டில்கள் மற்றும் ஆக்டிவா ஸ்கூட்டியை பறிமுதல் செய்தனர்.