Connect with us

இலங்கை

சுமந்திரனுக்கு கண்ணில்லையா? ஏழு மாதங்கள் கடந்து விளக்க கடிதம்!

Published

on

Loading

சுமந்திரனுக்கு கண்ணில்லையா? ஏழு மாதங்கள் கடந்து விளக்க கடிதம்!

 ஜனாதிபதி தேர்தலில் சிங்கள வேட்பாளர் சஜீத்தை ஆதரிக்கவில்லை என திருகோணமலை மாவட்ட தமிழரசுக்கட்சி உறுப்பினர்களுக்கு ஏழு மாதங்கள் கடந்து விளக்க கடிதம் அனுப்பும் சிங்கள தேசிய வாதி சுமந்திரனின் அடாவடி.

இன்று (02.04.2025)திருகோணமலையில் உள்ள தமிழ்தேசிய வாதிகள் பலருக்கு ஜனாதிபதி தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிட்ட அரியநேந்திரனை ஆதரித்து பிரசாரம் செய்தது தொடர்பாக இவ்வாறு விளக்கம் கேட்டு எழுதப்பட்டு கடந்த 26.03.2025, திகதி இடப்பட்ட கடிதங்கள் பதிவுத்தபாலில் வந்துள்ளதாக ஒரு உறுப்பினர் தெரிவித்தார்.

Advertisement

இதையிட்டு கருத்து கூறிய அந்த தமிழரசுகட்சி உறுப்பினர் தாம் கடந்த ஜனாதிபதி தேர்தலில் திருகோணமலை மாவட்ட இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ச. குகதாசன் ஐயா கூறியபடி அரியநேந்திரனை ஜனாதிபதி தேர்தலில் ஆதரித்தோம்.

குகதாசன் ஐயாவும் அரியநேந்திரனை ஆதரித்தார் சங்கு சின்னத்தை ஆதரித்து கருத்தரங்கு நடத்தினார். ஊடக அறிக்கையும் விட்டார். அவரின் சொற்படிதான் நாமும் கொள்கைக்காக தமிழர் ஒருவரை ஆதரித்தோம்.

அந்த தேர்தல் முடிந்ததற்கு பிறகு பொதுத்தேர்தலில் தமிழரசுகட்சி பிரதான வேட்பாளரான குகதாசன் ஐயாவை ஆதரித்து வீட்டுச்சின்னத்திற்கு ஆதரவாக பிரசாரம் செய்தோம் அவர் வெற்றிபெற்றார்.

Advertisement

இப்போது தீடிரென ஏழுமாதம் கடந்து என்ன கணக்கில் விளக்கம் கேட்டு உந்த சுமத்திரன் கடிதம் அனுப்புகிறார்?
எங்களை தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக்க சொன்ன குகதாசன் ஐயாவுக்கு பாராளுமன்ற உறுப்பினராக வேட்பாளராக சீற் கொடுத்தவரே இந்த சுமந்திரன்தானே அவருக்கு ஏன் நடவடிக்கை இல்லை? அவரை எம் பி ஆக்கியது நாங்கள்தான் அது தவறா?

அப்படியானால் முதுகு எலும்பு இருந்தால் குகதாசன் ஐயாட எம் பி வேலையை பறிக்க முடியுமா?

இப்போது உள்ளூராட்சி தேர்தலில் நாங்கள் தமிழரசுகட்சியைத்தானே ஆதரிக்கிறோம் கண்ணில்லையா பதில் பொதுச்செயலாளர.

Advertisement

சுமந்திரனுக்கும், பதில் தலைவர் சிவஞானத்தாருக்கும். இப்படியான கேடு கெட்ட செயலால் உள்ளூராட்சி தேர்தலில் எந்த சபைகளும் திருகோணமலையில மட்டுமல்ல யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வன்னி, அம்பாறை, வவுனியா, மன்னார் மாவட்டம் எல்லாம் மண்கவ்வுவது தப்பாது. ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் எம் பி எலக்சனில மண்கவ்வினது போதாதா ? எனவும் மேலும் கூறினார்.

அவர் தமது பெயரை குறிப்பிடவேண்டாம் என்றும் இந்த தமிழரசுக்கட்சிக்கு எவரும் உள்ளூராட்சி கலக்சனில் வாக்குப்போடவேண்டாம் எனவும் மேலும் கூறினார் அந்த தமிழரசுக்கட்சி திருகோணமலை மாவட்ட உறுப்பினர்

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன