Connect with us

இந்தியா

கிச்சன் கீர்த்தனா: இறால் மோமோஸ்

Published

on

Loading

கிச்சன் கீர்த்தனா: இறால் மோமோஸ்

வீக் எண்ட் என்றால் வெளியில் சென்று சுவைப்பவர்கள் நம்மில் பலருண்டு. தற்போதுள்ள குளிரான சூழலில் வீட்டிலேயே இந்த இறால் மோமோஸ் செய்து வீக் எண்டை வீட்டிலேயே கொண்டாடலாம். கால்சியம், அயோடின், புரதச்சத்துகள் அதிகம் உள்ள இந்த மோமோஸ் அனைவருக்கும் ஏற்றதாக அமையும்.

இறால் – ஒரு கப் (கொத்தியது)
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப

Advertisement

மைதா – முக்கால் கப்
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
உப்பு, தண்ணீர் – தேவைக்கேற்ப

மைதாவுடன் எண்ணெய், உப்பு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர்விட்டு மாவாகப் பிசையவும். மூடி போட்டு மாவை 30 நிமிடங்கள் தனியே வைக்கவும். வேறொரு பாத்திரத்தில் இறாலுடன் இஞ்சி, வெங்காயத்தாள், வெங்காயம், உப்பு சேர்த்துக் கலந்து தனியே வைக்கவும். மாவை சிறிய, ஒரே அளவான உருண்டைகளாக உருட்டி ஈரத்துணியில் மூடி தனியே வைக்கவும்.

ஓர் உருண்டையை எடுத்து லேசாக மாவு தூவிய பலகையின் மேல் வைத்து 2-3 இன்ச் விட்டமுள்ள வட்டமாகத் தேய்த்துக் கொள்ளவும். வட்டத்தின் நடுவில் இறால் கலவையை வைக்கவும். அதை விருப்பமான வடிவில் செய்துகொள்ளவும்.

Advertisement

இதேபோல் மற்ற மோமோக்களைத் தயார் செய்து, ஆவியில் வேக வைக்கத் தயாராகும் வரை ஈரத்துணியால் மூடி வைக்கவும். பிறகு இட்லி குக்கரில் வைத்து 5 – 6 நிமிடங்கள் ஆவியில் வேகவிடவும்.

இந்த மோமோக்கள் தயாரித்த பிறகு டிரான்ஸ்பரென்ட்டாக இருக்கும். அதாவது அவற்றின் உள்ளே இருப்பது வெளிப்படையாகத் தெரியும். இதை சாஸ் அல்லது காய்ந்த மிளகாய் பூண்டு சட்னியுடன் பரிமாறவும்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன