Connect with us

இலங்கை

யாழில் கைதாகிய இந்திய மீனவர்கள் விடுதலை

Published

on

Loading

யாழில் கைதாகிய இந்திய மீனவர்கள் விடுதலை

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்கள் இலங்கை அரசாங்கத்தின் நல்லெண்ண அடிப்படையில் 04.03.2025 இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர். 

 யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக கைது செய்யப்பட்டு யாழ் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்படிருந்தவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

 நீரியல் வளத்துறை திணைக்களத்தால் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு அரசாங்கத்தினால் நல்லெண்ண அடிப்படையில் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தினால் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

 விடுதலை செய்யப்பட்ட அனைவரும் யாழில் இருந்து மிரிகானைக்கு அனுப்பப்பட்டு அதன்பின்னர் இந்தியாவுக்கு அனுப்பப்படவுள்ளனர்.

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வருகைதந்துள்ள நிலையில் குறித்த மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement


images/content-image/1743820571.jpg

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன