Connect with us

இலங்கை

பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞன் ; அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை

Published

on

Loading

பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞன் ; அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை

வெலிக்கடை பொலிஸ் பிரிவின் நாவல பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் 01.04.2025 அன்று இரவு நுழைந்தபோது கைது செய்யப்பட்டார்.

அந்த நபர், கைது செய்யப்பட்டதன் பின்னர், ஒழுங்கீனமான நடத்தை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னர் சந்தேக நபர் உயிரிழந்தார்.

Advertisement

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அதன்படி, இந்த சம்பவம் குறித்து நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை நடத்துவதற்காக, வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கான பரிந்துரைகள், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பதற்காக, பதில் பொலிஸ் மா அதிபரினால்,பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சகத்திற்கு  இன்று (06) அனுப்பப்பட்டது.

இந்த சம்பவத்தில் கடமைகளை புறக்கணித்ததாகக் கண்டறியப்பட்ட ஒரு பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளின் சேவைகளை இடைநிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. 

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன