Connect with us

இலங்கை

100 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் பஞ்சகிரக யோகத்தால் ராஜயோகம் பெறும் ராசிக்காரர்கள்

Published

on

Loading

100 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் பஞ்சகிரக யோகத்தால் ராஜயோகம் பெறும் ராசிக்காரர்கள்

ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து யோகங்களை உருவாக்கி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

2025 ஏப்ரல்-மே காலகட்டத்தில் மீன ராசியில் சனி, சூரியன், புதன், சுக்கிரன், ராகு சேர்ந்து பஞ்சகிரக ராஜயோகம் உருவாகிறது. இந்த 5 கிரகங்களின் சேர்க்கையால் பஞ்சகிரக ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

Advertisement

அதில் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பாகவும், வாழ்க்கையில் பெரிய முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவுள்ளன. முக்கியமாக இந்த பஞ்சகிரக ராஜயோகத்தால் 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் சூரியனைப் போல் பிரகாசிக்கப் போகிறது.

இப்போது 100 ஆண்டுகளுக்கு பின் மீன ராசியில் உருவாகவுள்ள பஞ்சகிரக ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.

மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் பஞ்சகிரக யோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பல நன்மைகளைப் பெறுவார்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். இதன் மூலம் உங்கள் இலக்கை எளிதில் அடைவீர்கள். உங்களின் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும்.

Advertisement

சிலருக்கு சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். உங்களின் வணிகம் வேகமாக முன்னேறும் திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.

கன்னி ராசியின் 7 ஆவது வீட்டில் பஞ்சகிரக யோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். வணிகர்கள் நிறைய லாபத்தைப் பெறக்கூடும். ஆனால் பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

தொழில் ரீதியாக, பணியிடத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். தன்னம்பிக்கை மேம்படும். நீண்ட நாள் கனவு நனவாகும். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். பரம்பரை சொத்துக்களின் மூலம் நல்ல லாபத்தைப் பெறும் வாய்ப்புள்ளது. சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்ப்புக்கள் கிடைக்கும்.

Advertisement

மகர ராசியின் 3 ஆவது வீட்டில் பஞ்சகிரக யோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். அதோடு நல்ல லாபத்தையும் பெறுவார்கள். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.

வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். அதிர்ஷ்ட கதவு திறந்து, பண மழை கொட்டும். மேலும் ஏழரை சனியின் பிடியில் இருந்து விடுபட்டுள்ளதால், சனி பகவானின் ஆசியால் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் படிப்படியாக குறைந்து, வாழ்க்கை சிறப்பாக இருக்கும். முக்கியமாக திடீர் நிதி ஆதாயங்களைப் பெறக்கூடும்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன