விளையாட்டு
MI vs RCB LIVE Score: வெற்றி யாருக்கு? மும்பை – பெங்களூரு அணிகள் மோதல்!

MI vs RCB LIVE Score: வெற்றி யாருக்கு? மும்பை – பெங்களூரு அணிகள் மோதல்!
10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று திங்கள்கிழமை இரவு 7:30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கி நடைபெறும் 20-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.ஆங்கிலத்தில் படிக்கவும்: MI vs RCB LIVE Cricket Score, IPL 2025நடப்பு தொடரில் முதல் இரண்டு போட்டிகளை அடுத்தடுத்து வென்ற பெங்களூரு அணி 3-வது ஆட்டத்தில் தோல்வியுற்றது. இருப்பினும், அந்த அணி புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தில் இருக்கிறது. மறுபுறம், முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியுற்ற மும்பை 3-வது போட்டியில் வெற்றி பெற்று எழுச்சி கண்டது. ஆனால், மீண்டும் அடுத்த போட்டியில் அடி வாங்கியது. இந்த இரு அணிகளுமே தங்களது கடைசி லீக் போட்டியில் தோல்வியுற்றதால், இந்த ஆட்டத்தில் வெற்றியை ருசிக்க போராடுவார்கள். மும்பை அதன் சொந்த மைதானத்தில் ஆடுவதால் அந்த அணி மீது அதிக எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. தவிர, காயம் காரணமாக முந்தைய ஆட்டத்தில் ஆடாத ரோகித் களமாட வாய்ப்புள்ளது. இதேபோல், காயத்தில் இருந்து மீண்டு வந்திருக்கும் பும்ரா அணியில் இணைந்திருப்பது அவர்களுக்கு கூடுதல் உற்சகத்தை வழங்கும் என எதிர்பார்க்கடுகிறது.நேருக்கு நேர் ஐ.பி.எல்-லில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் இதுவரை 33 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த 33 போட்டிகளில் பெங்களூரு அணி 14 போட்டிகளில் வென்றுள்ளது. மும்பை அணி 19 முறை வெற்றி பெற்றுள்ளது.