சினிமா
“நாங்க கும்பலாக சுத்துவோம் ஐயோ அம்மானு கத்துவோம்” Ak பாடலிற்கு வைப் செய்த sk..

“நாங்க கும்பலாக சுத்துவோம் ஐயோ அம்மானு கத்துவோம்” Ak பாடலிற்கு வைப் செய்த sk..
அமரன் படத்தின் வசூல் வெற்றியினை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் வாழ்க்கை முழுவதுமாக மாறியுள்ளது. தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி இருக்கும் இவர் ஒரு படத்தின் வேலைகளை முழுமையாக முடித்த பின்னர் அடுத்த படத்தின் படப்பிடிப்புகளை செய்து வருகின்றார். தற்போது ஏ .ஆர் முருகதாஸ் இயக்கும் “மதராசி ” மற்றும் சுதா கெங்கார இயக்கத்தில் “பராசக்தி ” எனும் படங்களில் நடித்து வருகின்றார். “பராசக்தி ” படத்தின் படப்பிடிப்புகள் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முடிவடைந்ததும் அண்மையில் இலங்கையிலும் படப்பிடிப்புகளை முடித்துள்ளனர். இதுமட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன் நண்பர்களுடன் சேர்ந்து வைப் செய்வதும் குறையவில்லை சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது அழகிய வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார்.குறித்த பதிவில் அஜித்தின் “சோனா ஓ சோனா ” பாடலிற்கு தனது நண்பர் ஒருவ்ருடன் சேர்ந்து அதே போல் பாடி அசத்தியுள்ளார். குறித்த பதிவில் அவர் “நாங்க கும்பலாக சுத்துவோம் ஐயோ அம்மா-னு கத்துவோம் நாங்களே படி, நாங்களே கை தட்டுவோம்…மன்னிக்கவும் தேவா சார் & ஹரிஹரன் சார், இப்படி செய்ததற்கு ” என கூறியுள்ளார் .