இலங்கை
வீடு ஒன்றில் தீ விபத்தால் பெறுமதியான பொருட்கள் நாசம்

வீடு ஒன்றில் தீ விபத்தால் பெறுமதியான பொருட்கள் நாசம்
அம்பாறை – கல்முனை , கல்முனைக்குடி 12 பகுதியில் பழைய தபால் நிலைய வீதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்றையதினம்(7) மாலை தீ விபத்து ஏற்பட்டது.
இவ்வாறு திடீரென ஏற்பட்ட தீ காரணமாக வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்து அபாய உதவி கோரினர்.
இதனையடுத்து உடனடியாக செயற்பட்ட இளைஞர்கள் தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
இதேவேளை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினருக்கு அழைப்பினை ஏற்படுத்திய போதிலும் அவர்கள் உரிய இடத்திற்கு வருகை தரவில்லை என மக்கள் விசனம் தெரிவித்தனர்.
சம்பவத்தை அடுத்து அங்கு வருகை தந்த இலங்கை மின்சார சபையினர் மின் ஒழுக்கினால் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்ட பகுதியை சீர் செய்ததாக கூறப்படுகின்றது.