இந்தியா
பள்ளியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து: புகையில் சிக்கித் தவித்த பவன் கல்யான் மகன் படுகாயம்

பள்ளியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து: புகையில் சிக்கித் தவித்த பவன் கல்யான் மகன் படுகாயம்
ஆந்திர மாநிலத்தின் துணை முதலமைச்சரும், நடிகருமான பவன் கல்யாணின் மகன், சிங்கப்பூரில் அமைந்துள்ள பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.பவன் கல்யாண் மற்றும் அவரது மனைவி அன்னா லெஷ்னேவா ஆகியோருக்கு, கடந்த 2017-ஆம் ஆண்டு அக்டோபர் 10-ஆம் தேதி பிறந்தவர் மார்க் சங்கர். இவர் சிங்கப்பூர் நாட்டில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றில் பயின்று வருகிறார்.இந்நிலையில், அப்பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் மார்க் சங்கருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, கைகள் மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. மேலும், விபத்து காரணமாக ஏற்பட்ட புகையின் தாக்கத்தால் அவரது நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறுகின்றனர். இதைத் தொடர்ந்து, அந்நாட்டில் உள்ள மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளனர்.இதனிடையே, அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் பவன் கல்யாண் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அங்கு டும்ப்ரிகுடா மண்டல் குரிடியில் உள்ள கோயிலுக்குச் செல்லும் அவர், அப்பகுதி மக்களை சந்தித்து பின்னர் சிங்கப்பூருக்குச் செல்கிறார்.முன்னதாக, இந்த சுற்றுப்பயணத்திற்கு பின்னர், விசாகபட்டினத்தில் உள்ள ஸ்டீல் ஆலைக்கு பவன் கல்யாண் செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது.