உலகம்
இந்தோனேசியாவில் 5.9 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம்!

இந்தோனேசியாவில் 5.9 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம்!
இந்தோனேசியாவின் மேற்கு ஆச்சே மாகாணத்தில் இன்று அதிகாலை 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால், கடலில் சுனாமி அலைகள் எதுவும் எழவில்லை என்று இந்தோனேஷியாவின் நாட்டின் வானிலை மற்றும் புவியில் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
ஆரம்பத்தில், நிலநடுக்கத்தின் அளவு 6.2 ஆக இருந்ததாக நிறுவனம் அறிவித்தது, பின்னர் அதை கீழ்நோக்கி திருத்தியது.
இந்த நிலநடுக்கம் இன்று ஜகார்த்தா நேரப்படி அதிகாலை 2:48 மணிக்கு ஏற்பட்டது.
இதன் மையம் சிமியூலு ரீஜென்சியில் உள்ள சினாபாங் நகரிலிருந்து தென்கிழக்கே 62 கிலோமீற்றர் தொலைவில், கடற்பரப்பிலிருந்து 30 கிலோமீற்றர் ஆழத்தில் அமைந்துள்ளது.
நிலநடுக்கம் பெரிய அலைகளை உருவாக்க வாய்ப்பில்லை என்பதால், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
தீவுக்கூட்டங்களைக் கொண்ட நாடான இந்தோனேசியா, நில அதிர்வு மிகுந்த பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ளதால், பூகம்பங்களுக்கு ஆளாகிறது.
இந்த நாட்டில் 127 செயலில் உள்ள எரிமலைகள் மற்றும் அடிக்கடி டெக்டோனிக் செயல்பாடுகளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.