இந்தியா
தமன்னா, காஜல் பெயரில் கிரிப்டோ கரன்சி மோசடி: ரூ.3 கோடி சுருட்டி இளைஞர் புதுச்சேரியில் கைது

தமன்னா, காஜல் பெயரில் கிரிப்டோ கரன்சி மோசடி: ரூ.3 கோடி சுருட்டி இளைஞர் புதுச்சேரியில் கைது
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபத்தை தருகிறோம் என்று சொல்லி புதுச்சேரியைச் சேர்ந்த 10 நபர்களிடம் 2 கோடியே 60 லட்ச ரூபாய் பணத்தை முதலீடு செய்ய வைத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, புதுச்சேரி இணைய வழி காவல் துறை காவல் ஆய்வாளர் கீர்த்தி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இந்த வழக்கின் விசாரணையில், மோசடி கும்பல் கோயமுத்தூரை தலைமையிடமாக கொண்டு 2024 ஆம் ஆண்டு சினிமா நடிகைகளை கொண்டு மிக பிரம்மாண்டமாக துவக்க விழாவை நடத்தியதும், மூன்று மாதங்களுக்கு பிறகு 100 நபர்களுக்கு ஒரு கோடி ரூபாய் முதல் 10 லட்ச ரூபாய் இருக்கின்ற கார்களை அவர்கள் முதலீடு செய்ததற்கு ஏற்ப பரிசுகளை வழங்கியதும், மேலும் மும்பையில் கப்பலில் மிகப்பெரிய விழாவை வைத்து பொதுமக்களிடமிருந்து நிதியை திரட்டியது தெரியவந்தது. அத்துடன், இந்த கிரிப்டோ கரன்சி எந்த விதமான கிரிப்டோ கரன்சி டிரேடிங் ஆப்களிலும் வரவில்லை என்பதும் பணத்தை நேரடியாக இவர்கள் ஹைபை சர்க்கிள் என்ற ஒரு வங்கி கணக்கிற்கு புதுச்சேரியை சேர்ந்த அனைவருக்கும் தெரிய வந்தது. மேலும், டி.சி எக்ஸ் என்ற ஒரு காயினை அனுப்புகிறோம் என்று சொல்லி இவர்களாக உருவாக்கிய ஒரு கிரிப்டோ கரன்சியை புதுச்சேரி நபர்களுக்கு அனுப்பி அந்த டிசிஎஸ் காயினை விற்க முடியாமலும் அல்லது பழையபடி பணமாக மாற்ற முடியாமலும் குழம்ப செய்துள்ளனர்.அந்த பிளாட்பார்மையும் காணாமல் போகச் செய்து அனைவருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதில் புதுச்சேரி சேர்ந்தவர்களுக்கு மட்டும் 3.6 கோடி அளவிற்கு நஷ்டம் ஏற்படுத்தி சம்பந்தமாக புகார் விசாரணையில் உள்ளது. இந்த மோசடி கும்பல் மீது டெல்லி, ஒரிசா, மகாராஷ்டிரா, மும்பை, கோயமுத்தூர் பெங்களூர், பாண்டிச்சேரி, ஆந்திர பிரதேஷ், கேரளா, விழுப்புரம், திருப்பூர் போன்ற இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது . இணைய வழி மோசடிக்காரர்களுக்கு அக்கவுண்டை வாங்கி கொடுத்து பல கோடி ரூபாய் பணத்தை இணையவழி மோசடிக்காரர்கள் திருட இவர்கள் உடந்தையாக இருந்ததும் இரண்டு வழக்குகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மோசடி கும்பல் ஈடுபட்டிருப்பதும் அவர்கள் மீது புதுச்சேரியில் ஏற்கனவே ஒரு வழக்கு இருப்பதும் தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதே வழக்கு சம்பந்தமாக மேற்படி குற்றவாளிகள் இம்ரான் பாஷா ராய்ப்பூர் காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பல்வேறு இணைய வழி யுக்திகளையும் புதுச்சேரி காவல் நிலையத்தில் இருக்கின்ற புதிய வகை நுண் பொருட்களை வைத்து அந்த நபர்களை அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த 26.2.2025 அன்று ஆய்வாளர்கள் தியாகராஜன், கீர்த்தி மற்றும் தலைமை காவலர் மணிமொழி பாலாஜி தலைமையிலான தனிப் படை போலீஸ் சார், கோயமுத்தூரில் வைத்து நித்தீஷ் ஜெயின் மற்றும் அரவிந்த் என்ற இரண்டு நபர்களை கைது செய்து தலைமறைவாக உள்ள நபர்களை தேடி வந்தனர். இணையதளத்தை உருவாக்கிய குற்றவாளி தாமோதரன் கர்நாடகா தும்கூர் பகுதியில் மறைந்திருந்ததை கண்டுபிடித்து, போலீசார் உடனடியாக அவரை கைது செய்தனர். விசாரணையின் போது, தாமோதரன் “ஹாஷ்பே” என்ற இணையதளத்தை உருவாக்கி, முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை பெற்றுக் கொள்வதற்காக முதலீட்டின் லாபங்களை காட்டி அவர்களை ஏமாற்றியதாக ஒப்புக்கொண்டார். மேலும் அவரிடமிருந்து மூன்று தொலைபேசிகள் ஒரு லேப்டாப் 3 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் பிடிக்க தனிப்படை தீவிரம் காட்டி வருகின்றனர்.அறிவுரைஇந்நிலையில், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாரா சைதன்யா பொதுமக்களுக்கு இணைய வழி குற்றம் சம்பந்தமான விழிப்புணர்வு மற்றும் அறிவுரைகள் கூறியுள்ளார். அதில், “குறுகிய காலத்தில் அதிக லாபம் வழங்குவதாக கூறி முதலீடு செய்யுங்கள் என்று கூறினால் அதை நம்ப வேண்டாம்.வாட்ஸ் ஆப், டெலிகிராம் போன்ற சமூக வலைய தளங்கள் குழுக்களில் கூறும் ஷேர் மார்க்கெட் ட்ரேடிங் அறிவுரைகளை நம்பாதீர்கள். அவர்கள் இணைய வழி மோசடிக்காரர்கள் குறைந்த வட்டியில் லோன் தருவதாக கூறி அழைப்புகளோ, குறுஞ்செய்தியோ உங்கள் தொலைபேசியில் வந்தால் அதை நம்ப வேண்டாம். அவர்கள் உங்களை ஏமாற்றி பணத்தை திருடி விடுவார்கள். மேலும், சைபர் குற்றம் தொடர்பான சந்தேகங்களோ அல்லது ஆன்லைன் மோசடியில் பணம் இழந்திருந்தால் உடனடியாக இணைய வழி குற்றப்பிரிவு காவல் நிலைய இலவச தொலைபேசி எண்:1930, இணையதளம்: cybercrime.gov.in, தொலைபேசி எண்: 04132276144/9489205246 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.