பொழுதுபோக்கு
சமையல் மருமகளான ரோஹினி: சிரித்து கிண்டல் செய்யும் ஸ்ருதி; மீனா ரியாக்ஷன் என்ன?

சமையல் மருமகளான ரோஹினி: சிரித்து கிண்டல் செய்யும் ஸ்ருதி; மீனா ரியாக்ஷன் என்ன?
சிறகடிக்க ஆசை சீரியலில், முத்து சிட்டியின் அடியாட்களை அடித்து உதைத்து அவமானப்படுத்த, இந்த பக்கம் ரோஹினிக்கு மீண்டும் ஒரு பிரச்னை வெடிக்கிறது. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், மனோஜ் ஷோருமில் இருக்க, அங்கு வரும் ஒரு சாமியார், அவனுக்கு திருநீரு வைத்துவிட்டு, ஒரு பார்சலை கொடுக்க, அவரை பார்க்கும்போது மனோஜ்க்கு ரோஹினி மாதிரி தெரிகிறது. அதன்பிறகு அது சாமியார் என்று தெரிந்து ஃபீல் செய்கிறான். இந்த பக்கம், முத்து காரில் வந்துகொண்டிருக்கும்போது 2பேர், ஏறி, கார் சிறிது தூரம் சென்றவுடன் காரிலேயே குடிக்க தொடங்குகின்றனர்.இதைபார்த்த முத்து, காரில் குடிக்க கூடாது என்று சொல்லி அவர்களை இறக்கிவிட, அவர்கள் நாங்கள் சிட்டியுட ஆட்கள் என்ற சொல்லி திமிராக பேசுகின்றனர். அதன்பிறகு எனக்கு சிட்டியை தெரியும், வாங்க இன்னொரு இடத்துக்கு கூட்டி போகிறேன் என்று சொல்லி, முத்து அவர்களை மீண்டும் காரில் ஏற்றிக்கொண்டு, செல்கிறார். அந்த சமயத்தில் சிட்டியின் ஆட்கள் சத்யாவை தூக்கி வந்து சிட்டியின் முன்பு நிறுத்துகின்றனர்.நான் படிக்கனும் என்னை எதற்காக இங்கு கூட்டி வந்த என்று சிட்டியிடம் சத்யா வாக்குவாதம் செய்ய, நீ போன பிறகு இங்கு கணக்கு பார்க்க சரியான ஆளே இல்லை. நீ இங்க வேலைக்கு சேர்ந்துவிடு, வேற இடத்தில் கொடுக்கும் சம்பளத்தை நானே தருகிறேன். ஆனால் வேறொரு இடத்தில் நீ வேலை பார்க்க முடியாது என்று சொல்லி மிரட்டுகிறான் சிட்டி. அந்த நேரத்தில் அங்கு வரும் முத்து சிட்டியின் ஆட்களை அவன் கண் முன்பே அடித்து உதைத்துவிடுகிறான்.அதன்பிறகு சத்யாவிடம் எதுக்கு இங்க வந்த என்று கேட்க, என்னை தூக்கிட்டு வந்து வேலை செய்ய சொல்லி மிரட்டுராங்க என்று சத்யா சொல்ல, இதுக்கு மேல என் குடும்பத்து மேல கை வச்ச நான் எப்படி மாறுவேனு எனக்கெ தெரியாது என்று சிட்டியிடம் மிரட்டிவிட்டு செல்கிறான். மறுபக்கம், ரோஹினி வித்யாவிடம் போன் செய்து வீட்டில் நடந்ததை சொல்ல, தனக்கு பிறந்த நாள் என்று வித்யாவை பார்க்க முருகன் கேக்குடன் வருகிறான்.அந்த கேக்கை வெட்டும்போது வித்யா தனது காதலை சொல்கிறாள். இதனால் சந்தோஷப்படும் முருகன், வித்யா மீது கேக் பூச, அவளும் முருகன் மீது கேக் பூசுகிறாள். அடுத்து ரோஹினி கிச்சனில் சமைத்துக்கொண்டு இருக்க, அங்கு வரும் ஸ்ருதி என்ன நீங்க சமைக்கிறீங்க என்று கேட்க, நீங்க இதுவரைக்கும் சமைத்ததே இல்லையே வாங்க நான் சமைக்கிறேன் என்று சொல்கிறாள் மீனா. இதை கேட்ட ரோஹினி அத்தை என்னைத்தான் சமைக்க சொல்லியிருக்காங்க என்று சொல்ல ஸ்ருதி சிரிக்கிறாள்.நீங்க இதுவரைக்கும் அத்தையோட ஃபேவரெட் மருமகளா இருந்தீங்க, இப்போ சாப்பாடு செய்யும் மருமகளா மாறிட்டீங்க என்று சொல்லி, ஸ்ருதி சிரித்துக்கொண்டே இருக்க, ரோஹினி கோபத்தின் உச்சத்திற்கே செல்ல அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.